spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அரசியலை விட்டுவிட்டால் விவசாயம் பார்ப்பேன்: அண்ணாமலை

அரசியலை விட்டுவிட்டால் விவசாயம் பார்ப்பேன்: அண்ணாமலை

-

- Advertisement -

அரசியலை விட்டுவிட்டால் விவசாயம் பார்ப்பேன்: அண்ணாமலை

அரசியலில் இருந்து என்னை விட்டுவிட்டால் அப்படியே நான் விவசாயம் பார்க்க போய்விடுவேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Image

கோவை மாவட்டம் அன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ரவுடி சூர்யா பாஜகவில் இணைந்தது பற்றி எனக்கு தெரியாது. தவறான மனிதர்களாக சிலர் இருந்தாலும் தன்னை திருத்திக் கொள்ள இதை ஒருவாய்ப்பாக பார்க்கிறார்கள். நல்லவர்கள் எனக்கூறி கட்சியில் இணைபவர்கள் தொடர்ந்து நல்லவர்களாக இருக்கப்போவதும் இல்லை. பாஜக என்ற அடையாளத்தை வைத்துக் கொண்டு யாரேனும் தவறு செய்தால் நான் விட மாட்டேன்.

we-r-hiring

அரசியலில் இருந்து என்னை விட்டுவிட்டால் அப்படியே நான் விவசாயம் பார்க்க போய்விடுவேன். கூட்டணி குறித்து பேச வேண்டிய நேரத்தில் தேசிய தலைமை பேசும். பாதயாத்திரையின் நிலவரம் குறித்து தேசிய தலைமையிடம் தெரிவிக்கவே டெல்லி செல்கிறேன். நமது கருத்து கட்சியை வளர்க்க பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஒரு கருத்துக்கு எதிர் கருத்து சொன்னால் அது எங்கே போய் முடியும் என தெரியாது. இன்று டெல்லி செல்கிறேன்” எனக் கூறினார்.

MUST READ