Homeசெய்திகள்அரசியல்உலகிலேயே ‘மிஸ்டு கால்’ மூலம் உறுப்பினர் சேர்க்கையை அறிமுகப்படுத்திய கட்சி பாஜக- அண்ணாமலை

உலகிலேயே ‘மிஸ்டு கால்’ மூலம் உறுப்பினர் சேர்க்கையை அறிமுகப்படுத்திய கட்சி பாஜக- அண்ணாமலை

-

உலகிலேயே ‘மிஸ்டு கால்’ மூலம் உறுப்பினர் சேர்க்கையை அறிமுகப்படுத்திய கட்சி பாஜக- அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சியின் 44-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பாஜக கொடியை ஏற்றினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “43 ஆண்டுகளில் பாஜக பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. தமிழ்நாட்டு பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளது. பாஜகவில் 365 நாட்களும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க காங்கிரஸ் ஆட்சியின்போது ஒப்பந்தம் நடந்துள்ளது. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டுள்ளது. உலகிலேயே ‘மிஸ்டு கால்’ மூலமாக உறுப்பினர் சேர்க்கையை அறிமுகப்படுத்திய கட்சி பாஜக.

ஏப்ரல் 14 ஆம் தேதி திமுகவின் முந்தைய காலத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து வெளியிடப்படும். 2ஜி வழக்குகள் குறித்த விசாரணை தோண்டப்படவுள்ளது. ஒரு காலம் வரும். அப்போது நாங்கள் பல மாநிலங்களில் ஆட்சி செய்வோம். பல கடினமான சூழலில் பாஜக வளர்ந்துவருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் பாஜகவை ஏற்றுக்கொண்டுள்ளனர். 43 ஆண்டுகளில் எந்த கட்சியும் இந்த அளவுக்கு வளர்ச்சியை கண்டிருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரக்கூடிய நாள் தொலைவில் இல்லை. காரணம் மக்களுக்காக பாஜக சேவை செய்து கொண்டு இருக்கிறது. தொண்டர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.

MUST READ