spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்மூச்சு இருக்கா? மோடியை கலாய்த்த அமைச்சர்! பாஜக கண்டனம்

மூச்சு இருக்கா? மோடியை கலாய்த்த அமைச்சர்! பாஜக கண்டனம்

-

- Advertisement -

மூச்சு இருக்கா? மோடியை கலாய்த்த அமைச்சர்! பாஜக கண்டனம்

நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படுவதற்கு முன் சிறப்பு பூஜை செய்து, ஆதினங்கள் செங்கோலை பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தனர்.

Image

அதன்பின் தரையில் விழுந்து, செங்கோலை பிரதமர் மோடி வணங்கினார். பிறகு செங்கோலை ஏந்தியவாறு, ஆதீனங்களிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், “மூச்சு இருக்கா? மானம் ?? ரோஷம் ???” எனக் குறிப்பிட்டிருந்தனர்.

we-r-hiring

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “இறைவனை வணங்க இப்படி இருப்பதில் தவறில்லை. மானங்கெட்ட, முட்டாளே, உதவி கேட்க வந்தவர்களிடம் எப்படியோ இருக்க முயற்சித்ததாக செய்தி வந்தும் மானம், ரோஷம், வெட்கம், சூடு, சுரணை இல்லாமல் இன்னும் மூச்சு இருக்கிறதே? வெட்கங்கெட்ட ….. அமைச்சர் மனோ தங்கராஜ், பிரதமர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தரக்குறைவாக பதிவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அந்த நபரை அமைச்சர் பொறுப்பிலிருந்து அகற்றுவதோடு, கைது செய்து தகுந்த தண்டனை பெற்று தர வேண்டியது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடமை மற்றும் பொறுப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ