அண்ணாமலையின் ஆலோசகர் அதிரடி கைது
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஆலோசகர் செல்வக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பரப்பிய காரின்பேரில், அண்ணாமலையின் ஆலோசகர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணாமலைக்கு அரசியல் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசகராக உள்ளவர் செல்வகுமார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இவர் பாஜக மாநில தொழில்நுட்பப் பிரிவு துணைத்தலைவராவார். இவர் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமாரை கைது செய்துள்ள திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்வதன் மூலம், ஆளுங்கட்சிக்கு எதிரான குரல்களை அடக்கி, கருத்துச் சுதந்திரத்தை முடக்கி விடலாம் என்று கனவு காண்கிறது திறனற்ற திமுக அரசு. இதற்கெல்லாம் அஞ்சுபவர்களில்லை தமிழக பாஜக தொண்டர்கள்” எனக் பதிவிட்டுள்ளார்.
தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் திரு @Selvakumar_IN அவர்களைக் கைது செய்துள்ள @arivalayam அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்வதன் மூலம், (1/2)
— K.Annamalai (@annamalai_k) April 12, 2023
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம், “வார்ரூம் தலைவர், டெட்டா சேகரிப்பாலர், ஆலோசகர், பங்காளி, நெருங்கிய உறவினர், இடது கை கைது செய்யப்படுகிறார். ஏன் திடீர் கைது? இதுதான் வாட்ச் பில் பிரமாண்ட டிரெய்லர் வரவேற்பா? அண்ணாமலை மேனேஜர் பதவிக்கு பிறகு பாஜகவை சேர்ந்த சில அண்ணாமலையின் நெருங்கிய குழு குற்றங்கள் மற்றும் மோசடிகளில்…” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தவறுகளை தட்டிக் கேட்டு விமர்சித்த பாஜக தொழில் அணி துணை தலைவர் செல்வகுமார் அவர்களை ஃபாசிச திமுக அரசு கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக வை குறை சொல்பவர்களையெல்லாம் கைது செய்வதாக இருந்தால், தமிழக சிறைகளில் இடம் இருக்காது.
— Narayanan Thirupathy (@narayanantbjp) April 12, 2023
இதேபோல் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, “தவறுகளை தட்டிக் கேட்டு விமர்சித்த பாஜக தொழில் அணி துணை தலைவர் செல்வகுமார் அவர்களை ஃபாசிச திமுக அரசு கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக வை குறை சொல்பவர்களையெல்லாம் கைது செய்வதாக இருந்தால், தமிழக சிறைகளில் இடம் இருக்காது” எனக் கூறியுள்ளார்.