Homeசெய்திகள்அரசியல்"அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கும்"- வி.பி.துரைசாமி அதிரடி பேட்டி

“அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்கும்”- வி.பி.துரைசாமி அதிரடி பேட்டி

-

“அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்கும்”- வி.பி.துரைசாமி அதிரடி பேட்டி

அதிமுக- பாஜக கூட்டணி நீடிக்கும் என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

annamalai meets edappadi palanisamy

தமிழக முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அ.தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அத்துடன், 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சித் தலைமைத் தெரிவித்திருந்தது. அ.தி.மு.க.வின் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும், கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர்கள் யாரும் கருத்துத் தெரிவிக்காத நிலையில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

Image

இதனிடையே பாஜக மாநில பொறுப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் மாநில பெருங்கோட்ட தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள துணைத்தலைவர் விபி துரைசாமி, “அதிமுக- பாஜக கூட்டணி நீடிக்கும். அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்பதால்தான் ஆலோசனை நடந்துவருகிறது. அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காகவே பேசிவருகிறோம்” என்றார்.

MUST READ