Homeசெய்திகள்அரசியல்தமிழகத்தில் மோடிக்கு எதிராக கண்டனம் வலுக்கிறது. தமிழர்களை இழிவாக பேசுவதா? செல்வப் பெருந்தகை கண்டனம்.

தமிழகத்தில் மோடிக்கு எதிராக கண்டனம் வலுக்கிறது. தமிழர்களை இழிவாக பேசுவதா? செல்வப் பெருந்தகை கண்டனம்.

-

- Advertisement -

“தமிழர்கள் குறித்து அவதூறாக பேசிய சம்பவம் பற்றி ஒரு வாரத்திற்குள் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்காவிட்டால், பாஜக அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.”

தமிழகத்தில் மோடிக்கு எதிராக கண்டனம் வலுக்கிறது. தமிழர்களை இழிவாக பேசுவதா? செல்வப் பெருந்தகை கண்டனம்.

“தொடர்ந்து வெறுப்பு அரசியலை பேசி வரும் மோடியையும் அமித்ஷாவையும் கண்டு கொள்ளாமல், கும்பகர்ணனை போல் தூங்கிக் கொண்டுள்ள தேர்தல் ஆணையம் எப்போது விழித்துக் கொள்ளும் என்றும் அவர் வினவியுள்ளார்.”

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழர்களை திருடர்கள் என்று மோடியும் தமிழர்கள் ஒரிசாவை ஆளலாமா என்று அமித்ஷா கேட்பதும், தொடர்ந்து வெறுப்பு அரசியலை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு புறம்பாக பேசி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை தொடர்ந்து அவமதிக்கும் வேலையில் ஈடுபட்டு வரும் அவ்விருவர், தமிழர்களை திருடர்கள் என்று சொல்வது கடும் கண்டனத்திற்குரியது என செல்வப்பெருந்தகை சாடினார்.

தமிழகத்திற்கு வந்தால் திருக்குறள், இலக்கியத்தை பற்றி பேசும் மோடி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக பேசும் சந்தர்ப்பவாதி என அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மோடிக்கு எதிராக கண்டனம் வலுக்கிறது. தமிழர்களை இழிவாக பேசுவதா? செல்வப் பெருந்தகை கண்டனம்.

தமிழகத்தை சார்ந்தவர் ஒரிசாவை ஆளலாமா என அமித்ஷா பேசியதற்கு சோழ அரசாட்சியில் நாடு கடந்து தமிழர்கள் ஆட்சி செய்துள்ள வரலாறு அமித்ஷாவுக்கு தெரியவில்லை என குறை கூறினார்.

தொடர்ந்து வெறுப்பு அரசியலை பேசி வந்தாலும் தேர்தல் ஆணையம் எதுவும் செய்யாமல் எப்போதும் போல் கும்பகர்ணனை போல் தூங்கிக் கொண்டுள்ளது என விமர்சித்த செல்வப்பெருந்தகை, தேர்தல் ஆணையம் எப்போது விழித்து கொள்ளும் என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் தமிழர்கள் குறித்து இழிவாக பாஜக பேசினால், தமிழகத்தில் பாஜக இருக்க வாய்ப்பில்லை என்றும் ஒவ்வொரு இடமாக பாஜகவை எதிர்த்து போராட வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

இப்படி ஒரு இழிவான பிரதமரை இந்தியாவும் உலகமும் கண்டது இல்லை என கூறிய செல்வப்பெருந்தகை, ஒரு வாரத்தில் அமித்ஷா மற்றும் மோடி மன்னிப்பு கேட்கவில்லையென்றால் பாஜக அலுவலகத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முற்றுகையிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

தமிழகத்தில் மோடிக்கு எதிராக கண்டனம் வலுக்கிறது. தமிழர்களை இழிவாக பேசுவதா? செல்வப் பெருந்தகை கண்டனம்.

தமிழர்கள் குறித்து அவதூறு பேசும் நபர்களை கண்டிக்காமல் உள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, குறைந்தபட்ச சொரணை கூட இல்லாதவர் என, செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டினார்.

செல்லூர் ராஜு மட்டும் இல்லை பாஜக தலைவர்களும் ராகுல் காந்தியை புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கூறிய அவர் 4-ஆம் தேதிக்கு பின் பாஜக கூடாரம் காலியாகும் என்று செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

MUST READ