Homeசெய்திகள்அரசியல்திமுகவுக்கு யார் போட்டி என்பதில் தான் எதிர்கட்சிகளிடையே போட்டி- உதயநிதி ஸ்டாலின்

திமுகவுக்கு யார் போட்டி என்பதில் தான் எதிர்கட்சிகளிடையே போட்டி- உதயநிதி ஸ்டாலின்

-

திமுகவுக்கு யார் போட்டி என்பதில் தான் எதிர்கட்சிகளிடையே போட்டி- உதயநிதி ஸ்டாலின்

திமுகவுக்கு யார் போட்டி என்பதில் தான் அதிமுக, பாஜக இடையே மிகப்பெரிய போட்டி நடக்கிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பீகார் சாமியாரை கொலை முயற்சி சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் – வழக்கறிஞர் ராஜராஜன் ஆவடி காவல் ஆணையரிடம் புகார்

சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திமுகவுக்கு யார் போட்டி என்பதில் தான் மிகப்பெரிய போட்டி நடக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய வேலையை பார்க்காமல் தேவையில்லாத அரசியல் செய்து வருகிறார். ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது, பள்ளிகள் திறந்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு திரும்ப வேண்டும். நாங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம், அதன்படி வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

சனாதனத்தை பற்றி நான் பேசிக்கொண்டேதான் இருப்பேன், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகும் பேசுவேன். அண்ணா, கலைஞர், முதல்வர் பேசி உள்ளனர். அதுபோல நானும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பேன். போராடிய ஆசிரியர்கள் சங்கத்தினரின் கோரிக்கை நிதி நிலைமைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 1200 இளைஞர்களுக்கு இன்று பணிநியமன ஆணை வழங்குவதில் மகிழ்ச்சி; 4 மாதங்களுக்கு முன்பாக 1400 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது; ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயம் செய்த நிலையில், கடந்த ஆண்டு 13 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது; இதுவரை பயிற்சி பெற்றவர்களில் 61,921 பொறியில் மாணவர்கள் மற்றும் 57,312 கலை கல்லூரி மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் சாதிய பாகுபாடு இல்லை என்று சொல்லமாட்டேன். பிற மாநிலங்களை விட இங்கு குறைவுதான். ஆளுநர் பிற மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள நிலைமையை முதலில் பார்க்க வேண்டும். தினமும் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை போல் ஐடி அதிகாரிகள் ஆகிவிட்டனர். கொடுத்த வாக்குறுதியை ஒவ்வொன்றாக நிறாஇவேற்றிவருகிறோம்.” எனக் கூறினார்.

MUST READ