காமராஜர், ராஜாஜி போன்ற பெரிய தலைவர்கள் எல்லாம் 1971 ஆம் ஆண்டு எதிர்த்து பேசினர். ஆனால் அன்று திமுக மிகப்பெரிய அளவில் வென்று வரலாற்றைப் படைத்தது. 2026-ல் 200 இடங்களுக்கு மேல் திமுக கண்டிப்பாக வெற்றி பெறும் என திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் கே சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் மயிலாப்பூரில் உள்ள சிலோட்டர் புரத்தில் மாவட்ட செயலாளர் மயிலை.தா.வேலு தலைமையில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு தீர்மானம் ஏற்பு கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, மயிலை கிழக்கு பொதுச் செயலாளர் முரளி, மேற்கு பகுதி செயலாளர் நந்தனம் மதி, தியாகராய நகர் மேற்கு பகுதி செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உறுதிமொழியை ஏற்றனர்.
சுப.வீரபாண்டியன் மேடைப்பேச்சு

ஜாதியை பாகுபாடு கூடாது, பெண்களும் ஆண்களும் சமம் இன்று தொடர்ந்து வலியுறுத்தி, தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் என்று தலை நிமிர்ந்து நிற்கிற தலைவராக முதலமைச்சர் இருந்து வருகிறார், இது அவருடைய குரல் மட்டுமல்ல தமிழ்நாட்டின் குரலாக ஒழிக்க வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திமுக என்ற உணர்வு ஆழமாய் இந்த மண்ணில் பதிந்துள்ளது, இந்த நாட்டில் இந்த மண்ணில் நாங்கள் எப்பொழுதும் தலைகுனிய மாட்டோம் என்கிற உறுதிமொழி ஏற்றது சடங்கு சம்பிரதாயம் கிடையாது நம் உணர்வின் வெளிப்பாடு, திமுக என்பது தேர்தலுக்காக தொடங்கப்பட்ட கட்சி கிடையாது.
சனிக்கிழமை அரசியல்வாதி சிலர் முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்து விமர்சித்து உள்ளனர், முதலீடுகளை ஈர்த்து வருவதற்கு அல்லது முதலீடு செய்வதற்காக என கேள்வி எழுப்பி உள்ளார். இரண்டும் ஒன்றுதான், வெளிநாட்டில் இருந்து முதலிட ஈர்த்து 17 ஆயிரம் இளைஞர்களுக்கு நம்ம மண்ணில் வேலை கிடைத்துள்ளது, பள்ளி குழந்தைகளின் பசியாற மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது நீதி கட்சி தான், அதனை காமராஜர், மற்றும் எம்ஜிஆர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அதனை விரிவு படுத்தினார், மறைந்த ஜெயலலிதா பங்கு வைத்தார், நம் தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டுவந்த காலை உணவு திட்ட மூலம் தாயுமானவராக திகழ்கிறார். பஞ்சாப் முதலமைச்சர் அவர்கள் மாநிலத்தில் காலை உணவு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என கூறினார், கன்னட நாட்டில் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளனர், இந்த முயற்சி மூலம் உலகிற்கே வழிகாட்டியாக திமுக தலைவர் திகழ்கிறார்.
ராகுல் காந்திக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். பீகார் மாநிலத்தில் ஒரு பகுதியில் மட்டும் 64 லட்ச வாக்காளர்கள் காணாமல் போய் உள்ளார்கள். தமிழ்நாட்டில் அது போன்று செய்ய முயன்றால் தமிழக முதல்வர் அது போன்று நடக்கவிடமாட்டேன் என கூறியுள்ளார். தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் அவரை எப்போதோ வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். திமுகவை அசைத்துப் பார்க்க உங்களுக்கு வலிமையில்லை. தேர்தலில் தோல்வி வந்ததாலும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி வந்து அதன் மயக்கத்தினாலும் திமுக அழிந்து விடவில்லை. வென்றாலும் தோற்றாலும் தொடர்ந்து இந்த மண்ணில் உழைத்துக் கொண்டிருக்கிறது. 1971 ஆண்டு தேர்தலில் இன்று போல் எல்லோரும் திமுகவை எதிர்த்தார்கள். எல்லோரும் எனக்கும் திமுகவுக்கும் தான் போட்டி எனக் கூறுகிறார்கள். இதன்மூலம் திமுக முதல் இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது, இவர்கள் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டியிடுகிறார்கள் திமுகவிற்கு அடுத்து நான்தான் என சனிக்கிழமை காரர் மற்றும் ஆம்புலன்ஸ் காரர் தெரிவிக்கிறார்.
காமராஜர், ராஜாஜி போன்ற பெரிய தலைவர்கள் எல்லாம் 1971 ஆம் ஆண்டு எதிர்த்து பேசினர். ஆனால் அன்று திமுக மிகப்பெரிய அளவில் வென்று வரலாற்றைப் படைத்தது. 2026-ல் 200 இடங்களுக்கு மேல் திமுக கண்டிப்பாக வெற்றி பெறும். எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு காலத்தில் எதிர்த்தார். அவரே 75 வயதில் கலைஞரின் ஆட்சி பொற்கால ஆட்சி என யார் எதிர்த்தார்களோ அவர்களே இதுதான் பொற்காலம் என தெரிவித்தனர். கலைஞரின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி பேசிய அவர், கலைஞருக்கு பிறகு தலைவராக பதவி ஏற்ற பிறகு கலைஞரைப் போல பேச எழுத வராது ஆனால் கலைஞரைப் போல உழைக்கத் தெரியும் என சொன்னார் அந்த உழைப்பு தான் தமிழ்நாட்டை உயர்ந்தோங்க வைத்திருக்கின்றது.
அமெரிக்காவிற்கு செல்வது இனி கனவாக தான் மாறியுள்ளது. எச்1பி விசாவிற்கு ஆண்டுக்கு சுமார் 4,23,000 கட்டணம் என்பதை 88 லட்சமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உயர்த்தி இருக்கிறார். இது உலகத்தில் உள்ள எல்லோருக்கும் தான் என்றாலும், கடந்த ஆண்டு மட்டும் 72% விசா வாங்கி சென்றவர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள். மோடி என்ன செய்யப் போகிறார். வாய் மூடி மௌனமாக இருக்கின்றீர்களே ஆனால் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்த்து குரல் கொடுத்துள்ளார். மணிப்பூர் எரிந்து கொண்டிருந்த போது மோடி வெளிநாட்டில் இருந்தார். நாடாளுமன்றத்திற்கு கூட வரவில்லை. போகிற போக்கில் திரைப்படங்களில் நடித்துவிட்டு சட்டென்று அரசியலுக்கு வந்தவர்களில் இல்லை நாம். திரைப்படத்தில் நடித்துக் கொண்டு அந்த கவர்ச்சியில் வாக்குகளை கேட்கவில்லை. திரைப்படத்தின் மூலம் தங்கள் கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்தினோம். எடப்பாடி திமுகவை அழித்துவிடுவதாக கூறுகிறார், உங்களால் முடியுமா? உங்கள் கட்சியையே உங்களால் காப்பாற்ற முடியவில்லை. உங்கள் கட்சியை உங்களோடு இருக்கும் பாஜக அடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல அதிமுகவையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரிடம் ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளேன். திமுக வா அதிமுக வா, திமுக பாஜகவா என்பது இல்லை சமத்துவமா ஆதிக்கமா என்பது தான் நம் முன்னால் வைக்கப்பட உள்ள கேள்வி என திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் கே சுப.வீரபாண்டியன் கூறினார்.
9 ஆண்டு காலமாக தலைமறைவான சதுர்வேதி சாமியார்… தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு…
