Homeசெய்திகள்அரசியல்ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்

ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்

-

இந்தியாவில் ஜிகாத் வேண்டுமா அல்லது ராம ராஜ்யம் வேண்டுமா என்று மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்

வாக்காளர்களான உங்களின் ஒரு வாக்கு இந்தியாவை 5 வது பெரிய பொருளாதாரமாக மாற்றியது. இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை உயர்த்தியது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு 370 வது சட்டப்பிரிவை ரத்து செய்யப்பட்டது. ஆதிவாசி மகளை குடியரசுத் தலைவர் ஆக்கியது.

பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது. ஊழல்வாதிகளை சிறையில் அடைத்து, இலவச உணவு மற்றும் சிகிச்சைக்கு உத்தரவாதம் அளித்தது, இளைஞர்களின் எதிர்காலத்தை உயர்த்தி, வரம்பற்ற வாய்ப்புகளை உருவாக்கி, 25 கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்து, 500 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து ராமர் கோவில் கட்டப்பட்டது.

ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்

இந்திய கூட்டணி மக்களின் மகிழ்ச்சி அல்லது துக்கத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. இன்று இந்தியா வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது. இந்தியாவில் வாக்கு ஜிகாத் தொடருமா அல்லது ராம ராஜ்யம் தொடருமா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் அச்சுறுத்தல் விடுத்து வருவது போல் இங்கு காங்கிரஸ் கட்சியினரும் மோடிக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காங்கிரஸின் நோக்கங்கள் பயங்கரமானவை. அதன் சதிகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை புரிந்து கொள்ள 25 ஆண்டுகளாக காங்கிரஸ் தொண்டர்களாகவும், தலைவர்களாகவும் இருந்தவர்கள், இப்போது காங்கிரஸை விட்டு வெளியேறுவதால் மூலம் புரிந்துகொள்ளலாம் என பிரதமர் பேசினார்.

ஜிகாத் வேண்டுமா? ராம ராஜ்யம் வேண்டுமா? பிரதமர் பிரச்சாரம்

சமீபத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராதிகா கேரா சக பணியாளர்கள் மீது கடுமையான குற்றசாட்டுகளை முன்வைத்து கட்சியிலிருந்து விலகிருந்ததை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, ராமர் கோவிலுக்குச் சென்றபோது, காங்கிரஸை விட்டு வெளியேறும் அளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டதாக ஒரு பெண் குற்றம்சாட்டியுள்ளார். இன்னொருவர், காங்கிரஸை முஸ்லீம் லீக் மற்றும் மாவோயிஸ்டுகளால் கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.

மிகமுக்கியமாக ராமர் கோவில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி ரத்து செய்ய விரும்புகிறதாக பிரதமர் பேசியுள்ளார்.

MUST READ