Homeசெய்திகள்அரசியல்ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? 21-ல் விசாரணை

ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? 21-ல் விசாரணை

-

ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? 21-ல் விசாரணை

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை போல தனக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இடைக்கால ஜாமின் வழங்க கோரி ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்! – வழக்கை கோடைகால அமர்வில் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? 21-ல் விசாரணை

நில அபகரிப்பு முறைகேடு வழக்குகளில் சிக்கியுள்ள ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட சமீபத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் அடிப்படையில் தனக்கும் வழங்க வேண்டும் எனக் கூறி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவானது இடைக்கால ஜாமின் வேண்டும் என்பதற்காகவா? என கேள்வி கேட்டனர். அப்போது குறிப்பிட்ட அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் நில மோசடியில் ஹேமந்த் சோரனுக்கு தொடர்புடைய ஆவணங்கள் உள்ளது என தெரிவித்தார்.

ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? 21-ல் விசாரணை

அப்போது அப்படியான ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என ஹேமந்த் சோரன் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் தெரிவித்தார். ஏற்கனவே இரண்டு கட்ட வாக்குப்பதிவு ஜார்க்கண்ட் மாநிலத்தில் முடிந்துள்ளது என அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் கூறியபோது, நீதிபதிகள் இன்னும் எத்தனை கட்ட வாக்குப்பதிவுகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ளது என கேள்வி எழுப்பினர்.

https://www.apcnewstamil.com/news/politics/arvind-kejriwal-released-on-bail-the-election-field-has-started-to-heat-up/83936

அதற்கு ஹேமந்த் சோரன் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் மே 20 மற்றும் மே 25 ஆகிய தேதிகளில் இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் உள்ளதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மனு மீது மே 21 ஆம் தேதிக்கு முன்னதாக பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை விடுமுறை கால அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.

MUST READ