spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்எச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

எச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

-

- Advertisement -

எச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

எச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு! – அரசியல் தலைவர்கள் கவனமாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுரை தெரிவித்துள்ளது.

we-r-hiring

எச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டார். இது தொடர்பாக எச்.ராஜா மீது தமிழகத்தின் ஈரோடு, வேடசந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

எச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

இதேபோல் பெரியார் சிலையை உடைப்பேன் எனவும் ட்விட்டரில் பதிவிட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 11 வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை எச்.ராஜா நாடிய போது வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறுத்துவிட்டது.

https://www.apcnewstamil.com/news/politics/case-against-palaniswami-adjourned-to-june-27/84493

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை எச்.ராஜா நாடினார். இவ்வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசியலில் பேசப்படும் பேச்சுக்களின் தரம் குறைந்து கொண்டே வருவது குறித்து கவலை தெரிவித்தனர். மேலும் அரசியல் தலைவர்கள் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் மீது அதிக கவனத்தை கொண்டிருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

MUST READ