spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்டெல்லியில் இலையுதிர் காலம்: அமித் ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி..!

டெல்லியில் இலையுதிர் காலம்: அமித் ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி..!

-

- Advertisement -

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று இருக்கிறார். அவர் எதற்காக சென்று இருக்கிறார் என்பதை அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் சிலரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

we-r-hiring

அவர் அமித் ஷாவை இன்று சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணியும், கே.பி.முனுசாமி ஆகிய இருவரும் சட்டமன்றத்தில் இருந்து ஒரே காரில் புறப்பட்டு விமான நிலையம் சென்று டெல்லிக்கு சென்று கொண்டிருக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்களும் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திக்க இருப்பது கூட்டணியின் முக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

டெல்லி விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமியை அங்கிருக்கும் அதிமுக எம்.பி.,கள் தம்பிதுரை, சி.விசண்முகம் ஆகியோர் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர். முன்னதாக இன்று காலை ஜி.கே.வாசன், அமித்ஷாவை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சென்று சந்தித்து இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. டெல்லியில் உள்ள பாராளுமன்ற அலுவலகத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக  ஜி.கே.வாசன் தெரிவித்திருந்தார்.

 

'அயோத்தி ராமர்கோயில்'- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!

அவர் அமித்ஷாவை சந்தித்திருக்கும் நிலையில் அதிமுகவின் முக்கிய தலைவர்களும் டெல்லி சென்று இருப்பது மிக முக்கியமான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல்களம் சூடு பிடித்துள்ள நிலையில் அதிமுக -பாஜக கூட்டணி சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தி ரூ.650 கோடி வரி முறைகேட்டை கண்டுபிடித்து, ஒன்றிய அரசு மிரட்டி வருவதால் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணிக்கு சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.

MUST READ