Homeசெய்திகள்அரசியல்ஈழ தமிழர்கள் சீமான் மீது வைத்திருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்து விட்டனர் - தமிழர் ஒருங்கினைப்பு...

ஈழ தமிழர்கள் சீமான் மீது வைத்திருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்து விட்டனர் – தமிழர் ஒருங்கினைப்பு இயக்கம்

-

- Advertisement -

ஈழ தமிழர்கள் சீமான் மீது வைத்திருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்து விட்டனர் - தமிழர் ஒருங்கினைப்பு இயக்கம்நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் தமிழர் ஒருங்கினைப்பு இயக்கம் என்கிற அமைப்பை தொடங்கி உள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தென் மண்டல செயலாளராக இருந்து அதிலிருந்து வெளியேறிய வெற்றி குமரன், திருச்சி மண்டல நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பிரபு உள்ளிட்டோர் கூட்டாக பேட்டி அளித்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியதாவது , நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் என்கிற பெயரில் இயக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம்.தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் திருச்சியில் நாளை மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம்.

தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிந்த 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய அனைவரும் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

சீமானை பின்னால் இருந்து சிலர் இயக்கி வந்தனர் அது யார் என்று எங்களுக்கு தெரியாமல் இருந்தது. தற்பொழுது அவர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததன் மூலம் சீமானை பின்னால் இருந்து இயக்கியது வலதுசாரி சித்தாந்தம் கொண்டவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

புலம்பெயர் ஈழ தமிழர்கள் சீமான் மீது வைத்திருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்து விட்டனர். அவர்கள் நாங்கள் தற்போது எடுக்கும் முன்னெடுப்புகளுக்கு முழு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளனர்.

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் காதல் உறுதி…. வைரலாகும் புகைப்படம்!

MUST READ