spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்இந்திய அதிகாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சம்: அதானிக்கு அமெரிக்காவில் பிடிவரண்ட்!

இந்திய அதிகாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சம்: அதானிக்கு அமெரிக்காவில் பிடிவரண்ட்!

-

- Advertisement -

தொழிலதிபர் அதானி சூரிய ஓளி மின்சாரத்தை பெறுவதற்கு 25 கோடி டாலர்கள் லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுத்து பெற்றுள்ளார். அதில் அமெரிக்கர்கள் முதலீடு செய்ய வைத்து மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தியுள்ளார்’ என அமெரிக்க வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதானி குழுமத்தின் தலைவர் அதானி, அதானி கிரீன் எனர்ஜியின் இரண்டு நிர்வாகிகளான அவரது மருமகன் சாகர் அதானி, வினீத் ஜெயின் ஆகியோர் லாபகரமான சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு $25 கோடி டாலர் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

we-r-hiring
"ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதானி குழுமம் ஏற்கும்"- கவுதம் அதானி அறிவிப்பு!
File Photo

பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தொழிலை விரிவுபடுத்தியதாக நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்தின் அமெரிக்க வழக்கறிஞர் பிரியன் பீஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து, கவுதம் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அதானி குழுமத்திடம் இருந்து உடனடியாக கருத்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால் நிறுவனத்தின் மீதான செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்த அதானி குழுமம், “உயர்ந்த நிர்வாகத் தரத்துடன்” செயல்படுவதாகவும், “இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள ஊழல் எதிர்ப்பு மற்றும் லஞ்சத்திற்கு எதிரான சட்டங்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு இயங்குவதாகவும்’’ தெரிவித்து இருந்தது.

நேற்று நியூயார்க் நீதிமன்றத்தில் அதானி குழுமத்தின் 6 பேர் மீது லஞ்சக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது, சர்வதேச அளவிலான அதானியின் பரந்த தொழில் சாம்ராஜ்யத்தில் வெடிகுண்டு வீசியுள்ளது. 2023 ஆம் ஆண்டில்அதானி குழுமம், பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு, தங்கள் நிறுவன பங்குகளை போலியாக அதிகரிக்கச் செய்வதாக அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் வீழ்ச்சி அடைந்தது. பிறகு இழப்புகளை பெருமளவில் மீட்டெடுத்த அதானி குழுமம், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று கடுமையாக மறுத்தது.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் அறிக்கையின்படி , நிகர மதிப்பு $85.5 பில்லியன் டாலர் கொண்ட ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் அதானி.விரைவில் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம் - ஹிண்டன்பர்க்

அதானி மற்றும் மற்றவர்கள் அதானி கிரீன் எனர்ஜியில் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை மீற சதி செய்ததாக அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க சட்டத்தின் கீழ், மத்திய அரசு வழக்கறிஞர்கள் அமெரிக்க முதலீட்டாளர்கள் அல்லது சந்தைகளுடன் தொடர்பு வைத்திருந்தால் வெளிநாட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியும்.

MUST READ