மாற்றான் தாய் மனபோக்குடன் ஆளுநர் செயல்படுகிறார், பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட உயர்கல்வித்துறைக்கு தடையாக இருப்பது ஆளுநர் தான் பெரும்பான்மை மிகுந்த ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களை ஆளுநர் தன்வசப்படுத்தி மிரட்டி ஒரு தலைபட்சமான முறையில் நடந்து கொள்வதால் தான் உயர்கல்வித்துறையில் சில இடர்பாடுகள் வருகிறது என – உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் குற்றச்சாட்டியுள்ளாா்.
சென்னை பிராட்வே சாலையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பாக புதிதாக உட்புற கலையரங்கம் கட்டுவதற்கான கள ஆய்வினை அமைச்சர்கள் கோவி.செழியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் மேற்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கோ.வி.செழியன், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பாக தரமணி அண்ணா பல்கலைகழகம் மற்றும் பாரதி மகளிர் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டோம்.
இரு கல்லூரிகளிலும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும். கூடுதலாக பாரதி மகளிர் கல்லூரியில் 430 மீட்டர் தூரம் உள்ள சுற்று சுவர் கட்டிடத்தை 2 கோடி ரூபாய் செலவில் சரி செய்யப்படும் என தெரிவித்தார். உயர்கல்வித்துறை குறித்து ஆளுநர் குற்றச்சாட்டு குறித்தான கேள்விக்கு, மாற்றான் தாய் மனப்போக்கோடு ஒரு மாநில அரசில் என்னென்ன பணிகள் நடக்கிறது என்பதை வளர்ச்சிக்கான தரவுகளை பார்த்து படித்து புரிந்து ஆளுநர் அறிக்கை வெளியிட்டிருந்தால், நாங்களும் வரவேற்று இருப்போம். அகில இந்திய அளவில் உயர் கல்வித் துறையில் 28%, தமிழ்நாட்டில் உயர்கல்வி 48%, 2030 ஆம் ஆண்டு 50 சதவீதத்தை எட்டுவோம் என தரவுகள் சொல்கிறது என தெரிவித்தார்.
உயர்கல்வியில் ஆளுநர் செல்வது போல் எங்கே பின் தங்கி உள்ளோம். பிஹெச்டி ஆய்வு மாணவர்கள் தமிழ்நாட்டில் தான் முதலிடம், பேராசிரியர்கள் பற்றாக்குறையை பொறுத்த வரை கல்லூரி கல்வி இயக்கத்தின் சார்பில் கௌரவ பேராசிரியர்கள் நியமித்து ஆங்காங்கே அந்த பணிகளை நடத்திக் கொண்டிருக்கிறோம் என கூறினார். வேந்தர் என்கின்ற முறையில் ஆளுநராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்தில் அவர் செய்யக்கூடிய இடர்பாடுகள், தடை மற்றும் அமைக்கப்பட்டிருக்க கூடிய சிண்டிகேட் மீது காட்டுகிற மாற்றான் தாய் மனப்பான்மை அவர்களை செயல்படுத்த விடாமல் இருப்பது பல்வேறு காரணங்களால் பல்கலைக்கழகங்கள் ஒரு சில இடங்களில் பேராசிரியர் பற்றாக்குறை முழுவதற்கும் தடையாக இருப்பது ஆளுநர் தான் என தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் அதை களைவதற்கான சட்ட போராட்டங்களை தான் மேற்கொண்டு வருகிறோம். போதை பொருளை இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகிறோம். கடந்த காலங்களில் தவறு செய்தவர்களை ஊக்குவித்தார்கள். ஆனால் இப்போது போதைப்பொருள் குறித்து ஒரு தகவல் கிடைத்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போதைப்பொருள் ஒழிப்பில் தமிழகம் முதலிடம் வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் சிண்டிகேட் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களால் நிர்வாகிக்கப்படுகிற சட்ட விதிமுறைகள் வெவ்வேறானவை, ஒரு பல்கலைக்கழகத்தின் விதிமுறை மற்ற பல்கலைக்கழகத்திற்கு பொருந்தாது என்ற கட்டமைப்பு உள்ளது. இந்த நிலையில் பெரும்பான்மை மிகுந்த ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களை ஆளுநர் தன்வசப்படுத்தி மிரட்டி மேலும் மேலும் உங்களை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்கிறோம் என வாக்குறுதி அளித்து, ஒருதலை பட்சமான முறையில் நடந்து கொள்கிற காரணத்தினால் சில இடர்பாடுகள் மற்றும் தடைகள் வருகிறது. உயர்கல்வி துறையில் கவர்னர் தடைகள் உடைக்கப்பட்டு முன்னேற்ற பாதையில் முதலமைச்சர் எடுத்து செல்வார் என கூறினார்.
ஓய்வூதிய தொகையை எடுத்து தான் செலவு செய்தார்கள் என கடந்த ஆண்டு புதிய சிந்தனையை வெளியிடுவது அல்ல. ஒரு நிறுவனத்தில் பல்வேறு துறையின் கீழ் நிதி இருந்தால் அது தேவைக்கு ஏற்ப பேராசிரியர்கள், பல்கலைக்கழக கட்டடங்கள் தேவைகளுக்கு ஏற்ப பரிவர்த்தனை செய்யப்பட்டு, மீண்டும் பரிவர்த்தனை சரி செய்யப்படும் என தெரிவித்தார்.
அதற்காக பற்றாக்குறை இல்லை என்ற நிலைக்கு பதில் வராது. அது மாணவர்களின் சேர்க்கை, ஆசிரியர்களின் செலவினம் உள்ளிட்டவற்றையும், எந்த கட்டணத்தையும் உயர்ந்தாமல் உயர்கல்வியை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற மனநிலையில் உள்ளோம். உயர்கல்வித்துறையில் உள்ள குறைகளை போக்குவதும், பற்றாக்குறைய நீக்குவதும், பல்கலைக்கழக செயல் பாட்டையும், கல்வித்துறையையும் முதலமைச்சர் உயர்த்துவார் என தெரிவித்தார்.
தமிழ் வாழ்க என்று சொன்னால் அதற்கு மாறுபட்ட பொருளை எடுப்பதை என்ன என்று சொல்வது எனவும் செம்மொழி என்ற சொல்லை பயன்படுத்தாத ஆளுநர், தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். மாற்றான் தாய் மனப்பான்மையோடு இருக்கக்கூடிய உள்நோக்கம் தான் ஆளுநர் இவ்வாறு செயல்படுகிறார் என தெரிவித்தார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதாக அன்புமணி கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, இது விவாதப் பொருளாக மாறியுள்ளது. அது குறித்து நல்ல முடிவு விரைவில் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழிசை சௌந்தரராஜன் குறித்தான கேள்விக்கு, மாநில உரிமையை அடகு வைக்க வேண்டும் என்பதுதான் தமிழிசை சௌந்தரராஜனின் கொள்கை எனவும், எங்களை பொறுத்தவரை உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என தெரிவித்தார். பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி மறுக்கப்பட்டாலும் முதலமைச்சர் தமிழகத்தை வீறு நடை போட்டுக் எடுத்து கொண்டு செல்கிறார். அடக்கு வைப்பதற்கு இங்கு இடம் இல்லை என தெரிவித்தார்.
முன்னதாக சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பாக துரைபாக்கம் கண்ணகி நகரில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு மையம் மற்றும் நவீன சந்தை அமைக்கும் பணிகளையும், அதனை தொடர்ந்து தரமணி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் B – Plan பட்டப் படிப்புக்கான புதிய வளாகம் கட்டுவது தொடர்பான கள ஆய்வையும் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் கோ.வி.செழியன் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.
பாஜக ஆண்டு வருமானம் 83%… காங்கிரஸின் வருமானம் 170% அதிகரிப்பு..!