Homeசெய்திகள்அரசியல்இந்துத்துவா சக்திகளால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது – வைகோ சூளுரை

இந்துத்துவா சக்திகளால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது – வைகோ சூளுரை

-

- Advertisement -

“தாம் உயிரோடு இருக்கும் வரை பா.ஜ.க.வை தமிழ்நாட்டிற்குள்  வர விடமாட்டேன் என்று சூளுரைத்துள்ள வைகோ, இந்துத்துவா சக்திகளால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.”இந்துத்துவ சக்திகளால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது – வைகோ சூளுரைசென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் புத்தாண்டையொட்டி வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில். ஆண்டுதோறும் ஜனவரி முதல் நாளில் ஊடக  சந்திப்பை கடந்த 28 ஆண்டுகளாக நடத்தி வருவதாகவும் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் தை பொங்கல் வாழ்த்துகள் என்றும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு மக்களுக்காக புதிய புதிய திட்டங்களை  கொண்டு வரும் தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின், மற்ற மாநில முதல்வர்களுக்கு எடுத்துகாட்டாக நம்முடைய முதல்வர் உள்ளார் என பெருமிதம் தெரிவித்தார்.  வெள்ள நிவாரண நிதி உள்ளிட்டவற்றில் ஒன்றிய அரசு ,தமிழக அரசை ஓர வஞ்சனையுடன் நடத்துவதாக குற்றம் சாட்டிய வைகோ, இதனால் எதிர்காலம் விபரீதமாக மாறி விடும் என்று எச்சரித்தார்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற மோசமான திட்டத்தை  செயல்படுத்த நினைக்கும் பிரதமர் மோடி, ஹிட்லரைப் போல சர்வாதிகாரத்தனத்தோடு நாட்டுக்கே அதிபர் ஆகும் எண்ணத்தோடும் நடந்து கொள்வதாக அவர் குற்றஞ்சாட்டினார். இந்துத்துவா கொள்கையை நிலைநாட்ட  வேண்டும் என்று திட்டங்களை பாஜக கொண்டு வருவதாக கூறிய வைகோ, பெரியாரின் சுயமரியாதை திருமணத்திற்கும் வேட்டு வைத்து விடுவார்கள் என அச்சம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்து இந்து ராஷ்டிரியத்தை  உருவாக்கி அதில் இந்தியையும் ,சமஸ்கிருதத்தையும் வைத்து விடுவார்கள் என்றும், நாடு அடுத்த 50 ஆண்டுகளில் சோவியத் யூனியன் சிதறுண்டது போல், துண்டு துண்டாக போகும் நிலைமை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார். மற்ற மாநில முதல்வர்களுக்கு முன்னோடியாக மு.க. ஸ்டாலின் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வென்றதை போல அடுத்த தேர்தலில் வெல்லும் என்றும் 2026 ஆம் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி  200-க்கும் அதிமான இடங்களில் வெற்றி பெறும் என்றும் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.

கூட்டணி ஒற்றுமையாக உள்ளதாக கூறிய அவர், திமுக அணியை இன்னும் வலுப்படுத்தி வெற்றி பெற வலது தோளாகவும் இடது தோளாகவும் மதிமுக இருக்கும் என்றும் உறுதி தெரிவித்தார்.  விஜய்யால் திமுக அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என கேள்வி ஒன்றுக்கு வகோ பதிலளித்தார். தற்போது உள்ள இலங்கை அதிபர் திசநாயக்கா ஆட்சியிலும் மீனவர்கள் கொல்லப்படுவதாக குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டை காலனி அடிமை நாடாக டெல்லி கருதுகிறது என்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் கொடூரமானது என்றும் அந்த குற்றவாளிக்கு  அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் வைகோ உறுதிபடத் தெரிவித்தார். தாம் உயிரோடு இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜகவை வர விடமாட்டேன் என சூளுரைத்த வைகோ, பாஜக இந்துத்துவா சக்திகளால் தமிழ்நாட்டில் ஒருபொழுதும் காலூன்ற முடியாது என்றும் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் ரசிக்கும் படியாக இருந்தது என்றும் கூறினார்.

2026 சட்டமன்றத் தேர்தலில்; அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடியார் முடிவெடுப்பார்- செல்லூர் ராஜூ

 

MUST READ