Homeசெய்திகள்அரசியல்என்னை மக்கள் எளிதாக சந்திக்க முடியும் - சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்

என்னை மக்கள் எளிதாக சந்திக்க முடியும் – சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்

-

- Advertisement -

முதலில் மக்களை சந்திக்க விரும்புகிறேன். மக்கள் எளிதில் சந்திக்க கூடிய எம்.பி.ஆக இருக்க விரும்புகிறேன்- சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்.

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ். தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த ஆவடி சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அவருடன் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் மற்றும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விசிக நிர்வாகிகள் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

மக்களை சந்திக்கிறேன், மக்களை சந்திக்க விரும்புகிறேன் - சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்முன்னதாக திருமுல்லைவாயல்  பச்சையம்மன் ஆலயத்தில் பிரார்த்தனை செய்தப் பின்னர் வாகனத்தில் பேரணியாக சென்று ஆவடி முழுவதும் நன்றி தெரிவித்தார். இறுதியாக பட்டாபிராமில் நிறைவு செய்தார்.

ஆவடி தொகுதி மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக என்ன செய்ய திட்டம்  வைத்திருக்கிறீர் என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்,தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் பல்வேறு  கோரிக்கைகளை மனுக்களாக தந்தனர்.

ஆவடியில் முடிவடையாத நிலையில் உள்ள மேம்பால பணிகள், சாலைகள், இங்குள்ள தொழிற்சாலைகளில் உள்ள பிரச்சனைகள் என்று மக்கள் நிறைய பிரச்சனைகளை கூறியுள்ளனர்.

முதலில் நான்  மக்களை சந்திக்க விரும்புகிறேன், அவர்கள் என்னை எளிதாக சந்திக்கக் கூடிய எம்.பி. ஆக இருக்க விரும்புகிறேன், மக்கள் சந்திப்பிற்கு பின்னர் என்ன குறைகள் உள்ளதோ அந்த குறைகளை சரி செய்யும் முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார்.

MUST READ