spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்காங்கிரஸை கதற விடும் நிர்வாகிகள்: தலைநகரில் கதிகலங்கும் ராகுல் காந்தி

காங்கிரஸை கதற விடும் நிர்வாகிகள்: தலைநகரில் கதிகலங்கும் ராகுல் காந்தி

-

- Advertisement -

டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே அரசியல் மோதல் உச்சகட்டம் அடைந்துள்ளது. டெல்லி காங்கிரஸின் மூத்த தலைவர்கள் இப்போது ஆம் ஆத்மியில் தங்களை அடுத்தடுத்து இணைத்துக் கொண்டு வருகின்றனர்.

நாட்டில் மதரீதியிலான இட ஒதுக்கீட்டை கொண்டு வர முடியாது - ராகுல் காந்தியை எச்சரித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா

we-r-hiring

மதீன் அகமதுவுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவரும், சீமாபுரி தொகுதியின் மூன்று முறை எம்எல்ஏவுமான வீர் சிங் திங்கனும் இன்று ஆம் ஆத்மி கட்சியி இணைந்தார். அவரை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மியின் தேர்தல் நடவடிக்கைகளால் காங்கிரஸ் மிகவும் வருத்தமடைந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் ஒரு பேட்டியில் ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கினார். கெஜ்ரிவால் ‘கூட்டணி தர்மத்தை’ பின்பற்றவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் தலைவரும், சீலம்பூர் தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாகவும் இருந்த மத்தின் அகமதுவும் நவம்பர் 10ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். இதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவரது மகன் மற்றும் மருமகளும் ஆம் ஆத்மியில் இணைந்தனர். டெல்லி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அகமதுவை ஆம் ஆத்மி கட்சியில் இணைவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு

நேற்று, காங்கிரஸ் கவுன்சிலரும், அவரது கணவரும் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து, மேயர் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தனர். டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிய கவுன்சிலர் சபிலா பேகத்தின் கணவர் முகமது குஷ்னூத், மேயர் தேர்தலில் இருந்து விலகியதோடு, பாஜகவை ஆதரிக்க முடியாது. ஆகையால் ஆம் ஆத்மியில் இணைகிறேன்’’ என்று தெரிவித்தார்.

முகமது குஷ்னூத்தும், அவரது எனது மனைவி சபிலா பேகமும் (கார்ப்பரேஷன் கவுன்சிலர் முஸ்தபாபாத் வார்டு 243) காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினர்.

மற்ற கட்சிகளின் தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியில் சேர விருப்பம் தெரிவித்திருப்பது, அக்கட்சி பெரும் பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதற்கான அறிகுறி என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ‘‘கட்சி எப்போதும் செயல்திறனின் அடிப்படையில்தான் நகரத்தில் வாக்குகளை தேடுகிறது. அதனால்தான் மற்ற கட்சிகளைச் சேர்ந்த நல்ல தலைவர்கள் சாமானியர்களுடன் இணைய விரும்புகிறார்கள். ஆம் ஆத்மி கட்சியோ, நாடோ யாருடைய சொத்தும் இல்லை என்பதால் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நல்ல வேட்பாளர்களை நிறுத்த ஆம் ஆத்மி தயாராகி வருகிறது’’ என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

MUST READ