மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஏற்படும் முரண்பாடுகளை கலையும் வகையில் ஒரு சட்டத்தை கொண்டு வரலாம் .இதற்காக வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் இது குறித்து விவாதிக்க உள்ளோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவர் பாலாஜி நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டு நலமாக உள்ளார் .அவருக்கு நேர்ந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. தனி நபருக்கு சங்கடம் ஏற்பட்டால் உரிமையுடன் பேசி இருக்கலாம் ஆனால் கத்தியால் குத்தியது மிகப்பெரிய தவறு இது தொடர்பாக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார் என்பது வரவேற்கதக்கது .ஒரு தாய்க்காக என்று பல லட்சம் உயிர்களை காப்பாற்றும் மருத்துவர்களை தாக்குவது தவறு .
என் அம்மா மருத்துவமனைக்கு சென்று நடந்து வரும் போது இறந்தவிட்டார் அதற்காக சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள கூடாது . நோயாளிகளின் சூழலை கருத்தில் கொண்டு அந்தந்த மருத்துவமனையில் மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் போதிய அளவு மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் .மருத்துவர்கள் தவறு செய்தால் என்ன செய்ய வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறையில் வழிகாட்டுதல் உள்ளது. நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்க ஒரு சட்டமே இயற்றலாம் என்றார்.
ஆசிரியா்களுக்கு மாணவா்கள் பெற்றுத் தரும் நற்சான்று எது – அமைச்சா் விளக்கம் !