சர்வதிகார மனப்பாங்கு கொண்ட இந்துத்துவா சக்திகளிடமிருந்து நாட்டை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் கூறியுள்ளாா்.முத்தமிழ் அறிஞரின் செம்மொழி நாள். சென்னை அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ் தலைமையில் லட்சிய கலையின் போராளி! இலக்கியம் செதுக்கிய படைப்பாளி! எனும் தலைப்பில் புகழரங்கம் 22 வது நிகழ்வாக கொரட்டூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. அதில் அமைச்சர்கள் எஸ்,எஸ், சிவசங்கர், சேகர் பாபு,தமிழ்நாடு பாடநூல் கழக செயலாளர் திண்டுக்கல் லியோனி, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், பத்திரிக்கையாளர் தராசு ஷியாம், திமுக தமிழன் பிரசன்னா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
அமைச்சர் சிவசங்கர் ஆற்றிய உரையில், ” 28 வயதில் கலைஞர் வசனம் எழுதினார் அப்பொழுது எழுதிய வசனங்கள் எல்லாம் முதலமைச்சரான பிறகு நடைமுறைப்படுத்தினார். இந்த காலத்திலும் 28 வயது இளைஞர்கள் சினிமாவுக்கு வசனம் எழுதினால் கேட்க முடியாத அளவிற்கு இருக்கும் அல்லது பிளாக் காமெடியாக இருக்கும்.

தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து மோடி அரசியலுக்கு எதிராகவும், ஆர் எஸ் எஸை எதிர்த்து குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். தமிழகத்திற்கு மட்டுமில்லாமல் அனைத்து மாநிலத்திற்கும் சேர்த்து குரல் கொடுக்கிறார். அதிமுக கட்சி உரிமைகளுக்காகவும் முதலமைச்சர் குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். அவர்கள் தங்களுடைய கட்சிகளையும் கொண்டு போய் அடகு வைத்து கொண்டிருக்கிறார்கள்.
வரும் சட்டமன்றத் தேர்தல் வெறும் சட்டமன்றத் தேர்தலாக இருக்காது நம்முடைய தமிழ்நாட்டையும் தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தையும் காப்பாற்றுகின்ற தேர்தலாக இருக்கும். முதலமைச்சர் தமிழ் மொழிக்கு மட்டுமல்லாது மற்ற மொழிகளுக்கும் சேர்த்து குரல் கொடுப்பது தான் அனைவருக்குமான உரிமை குரலாக உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவையும் ஏகாதிபத்தி சர்வதிகார மனப்பாங்கு கொண்ட இந்துத்துவா சக்திகளிடமிருந்து நாட்டை மீட்க வேண்டி போராடத்தான் வருகிற சட்டமன்ற தேர்தல் நமக்கு அமைந்துள்ளது. தமிழகத்தை காப்பாற்ற நாம் அனைவரும் போராடுவோம் என தெரிவித்தார்.”அவரை தொடர்ந்து தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி பேசுகையில், ”இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பழநியில் நடைப்பெற்ற முருகர் மாநாட்டின் புத்தகத்திற்கு முதல் அணிந்துரை முதலமைச்சரும், இரண்டாவது அணிந்துரை துணை முதலமைச்சரும் கொடுத்திருந்தனர். வெளிநாடுகளை சேர்ந்த முருக பக்தர்களும் அணிந்துரைகள் வழங்கி இருந்தனர். இந்த மாநாட்டில் விருதுகளும் வழங்கப்பட்டது. இதுதான் உண்மையான முருகன் மாநாடு.
2021 ல் முன்னாள் பாஜக தலைவர் முருகன் வேல் யாத்திரை நடத்தினார். வேல் யாத்திரை நடத்தையுமே அதற்குப்பின் வந்த இரண்டு தேர்தலிலும் தோல்வியை தழுவினார். அதேபோலத்தான் அண்ணாமலையும் இரண்டு தேர்தல்களிலுமே தோல்வியை தழுவினார்.
உலகமே திருப்பரங்குன்றம் மலை என சொல்லி வரும் நிலையில் அந்த மலையின் பெயரை சிக்கந்தர் மலை என மாற்றியதாக நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அபாண்டமாக பழி செலுத்துள்ளார். மதக் கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கில் தான் இந்து முன்னணி இந்த மாநாட்டையே நடத்தி இருந்தது. முருகர் மாநாட்டில் அண்ணாவையும் பெரியாரையும் இழிவாக பேசியதை பார்த்துக் கொண்டு ஒரு நாள் கழித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் பதவிக்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார்கள்.
அதிமுகவினரும் ஒவ்வொரு முறையும் தங்களுடைய வேஷத்தை மாற்றிக் கொண்டு இருப்பார்கள் என தெரிவித்தார். முருகன் படத்தைக் காட்டி ஓட்டு பிச்சை கேட்கிறவர்களை 2026ல் தோற்கடித்து உதயசூரியன் உதிக்கும் உதிப்பதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளாா்.”