spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பிப்.26- ல் தொடங்குகிறது 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' பரப்புரை!

பிப்.26- ல் தொடங்குகிறது ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ பரப்புரை!

-

- Advertisement -

 

பிப்.26- ல் தொடங்குகிறது 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' பரப்புரை!

we-r-hiring

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 26- ஆம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தி.மு.க.வினர் வீடு வீடாகச் சென்று பரப்புரையைத் தொடங்கவுள்ளனர்.

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நிவாரணம் அறிவிப்பு!

தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.கஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், பா.ஜ.க.வின் அநீதிகள், தி.மு.க. அரசின் சாதனைகள், பட்ஜெட் அம்சங்களை மக்களிடம் கொண்டு செல்ல தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தேர்தலுக்கு பிறகு கட்சியிலும், அரசிலும் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் மிக வேகமாக நடந்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, மாவட்டந்தோறும் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தில் 4,000- க்கும் அதிகமான கோரிக்கைகள் வந்திருப்பதாகவும், அதன் அடிப்படையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நிவாரணம் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், வரும் மார்ச் 19- ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ