spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்- மு.க.ஸ்டாலின்

இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்- மு.க.ஸ்டாலின்

மோடியால் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
File Photo

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது.

இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது.

we-r-hiring

அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ