இப்போது முருகரை கையில் எடுத்துள்ளோம், 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என்று பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பேச்சுக்கு முருகன் ஒருபொழுதும் பாசிசவாதிகளை ஆதரிக்க மாட்டார் என செல்வப் பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளாா்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் அமைச்சர் கக்கன் திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தியப்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”முருகர் ஒரு பொழுதும் பாசிசவாதிகளின் கையில் சிக்க மாட்டார், தமிழ் கடவுள் முருகன் ஒருபொழுதும் பாசிசவாதிகளை ஆதரிக்கவும் மாட்டார், அவரை அணுகவும் முடியாது. முருகனை யாரும் ஹைஜெக் செய்யவும் முடியாது ஒரு பொழுதும் அவரை ஏமாற்றவும் முடியாது.
இவர்கள் ராமரை ஏமாற்ற முயற்சி செய்தார்கள் ராமர் பிறந்த அதே மண்ணில் பாஜகவை இராமர் தோல்வி அடைய செய்தார், அதேபோல பாஜக தமிழ்நாட்டில் புற முதுகிட்டு ஓடும் அளவிற்கு முருகர் தோல்வியை தருவார் .

முதல் முதலில் இந்தியாவில் ராகுல் காந்தி தான் சாதி வாரி கணக்கெடுப்பை பற்றி தொடர்ந்து பேசி வருகிறார், நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்து வருகிறார் அந்த அழுத்தம் தாங்க முடியாமல் தான் பெயருக்காக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று பாஜக சொல்லி இருக்கிறது, ஆனால் இது காணல் நீர் தான், அதிகபட்சம் மூன்று மாதங்களில் சாதிவாக கணக்கெடுப்பு நடத்தலாம் என்று கூறுகிறார்கள் ஏன் 2027 என்கிறார்கள் என்று தெரியவில்லை” என விமர்சித்துள்ளார்.
மூத்த வழக்கறிஞருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்… உச்ச கட்ட கோபத்தில் பார் அசோசியேசன்…