Homeசெய்திகள்அரசியல்நவம்பர்- 27: ஓ.பி.எஸ் எடுக்கும் முக்கிய முடிவு!

நவம்பர்- 27: ஓ.பி.எஸ் எடுக்கும் முக்கிய முடிவு!

-

- Advertisement -

அ.தி.மு.க.வில் எப்படியாவது இணையவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி இணைப்புக்கு வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.முதலமைச்சர் மத்திய அரசிடம் நிதி பெறுவதில் அக்கறை காட்டாதது ஏன் ? - ஓபிஎஸ்

‘‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தபடி, தொண்டர்கள் அனைவரும் இணைந்த அ.தி.மு.க., மீண்டும் மலரும். உறுதியாக அனைவரும் இணைகிற காலம் வெகு துாரத்தில் இல்லை’’என்கிறார் ஓ.பி.எஸ்.

‘‘அ.தி.மு.க., இணைவதற்கு சாதகமான நிலை உள்ளது. மக்களுக்காக நான் பேசுகிறேன்; அ.தி.மு.க., ஒருங்கிணைக்கப்படும். ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். ரவுடிகள் கொட்டம் அடக்கப்படும். மக்கள் நிம்மதியாக இருக்க, ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும். சட்டசபை தேர்தலில் ஒன்றிணைந்த அ.தி.மு.க.,வை பார்ப்பீர்கள்’’ என்கிறார் சசிகலா.

ஆனால் எடப்பாடி பழனிசாமி இணைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிறார். இந்நிலையில், நவம்பர் 27-ல் உரிமை மீட்புக் குழு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்ட இருக்​கிறார் ஓபிஎஸ். இதிலாவது அதிமுக இணைப்பு தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது தான் எது நடந்தாலும் ஓபிஎஸ்ஸை கைவிடாமல் 3 ஆண்டுகளாக அவரைப் பின்தொடரும் ஆதரவாளர்​களின் எதிர்​பார்ப்பாக உள்ளது.

ஓ.பி.எஸ்.ஸிடம் இருக்கும் ஒரு சிலரின் விருப்பமாவது நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

MUST READ