நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகி விரைவில் திராவிட கட்சியில் இணையப்போவ்வதாக எக்ஸ் வலைதளத்தில் பரவிவருகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் கொதித்து எழுந்தார்கள். அப்போது திராவிட இயக்க ஆதரவாளர்கள், தமிழ்தேசிய இன உணர்வாளர்கள் என்று முக்கிய சிந்தனையாளர்கள், அறிஞர்கள் எல்லோரும் இலங்கையில் நடந்த இனப்படுகொலைகக்கு எதிராக திரண்டார்கள். லட்சக்கணக்கில் திரண்ட இளைஞர்களை ஒருமுகப்படுத்தி முறையான தமிழ்தேசிய உணர்வுகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.
அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும் என்பதற்காகவும், சினிமாவில் அறிமுகமான முகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் தலைமை ஒருங்கிணைப்பாளராக இயக்குனர் சீமானை நியமனம் செய்து 2010 மே மாதம் நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சீமானின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த திராவிட தமிழ்தேசிய சிந்தனையாளர்கள் விலகினார்கள்.
திராவிட இயக்க சிந்தனையாளர்களாலும், தமிழ் உணர்வாளர்களாலும் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி காலப்போக்கில் திராவிட இயக்க எதிர்ப்பு இயக்கமாக மாறிவிட்டது. அதனால் ராஜீவ்காந்தி, பேராசிரியர் கல்யாண சுந்தரம் போன்ற சில நிர்வாகிகள் விலகினார்கள்.
இந்த காலக்கட்டத்தில் மீனவ மக்களின் விழிப்புணர்வாளராக பணியாற்றி வந்த காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வந்தார். அந்த கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் மேடை பேச்சாளராக மாறினார். அவருடைய பேச்சுக்களை கேட்க மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டார்கள். அந்த அளவிற்கு பொறுமையாக, நிறுத்தி எளியவர்களுக்கும் புரியும்படி பேசுவார். அந்த கட்சியில் அவருக்கென்று சில ஆதரவாளர்கள் உருவானார்கள்.

இந்த நிலையில் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வாய்ஸில் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் “கட்சியில் காளியம்மாள் என்ற ஒரு பிசுரு இருக்கிறது. அதையும் தட்டி விட்டால் சரியாயிடும்”என்று பேசியிருந்தார். அதன் பின்னர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் “நான் பிசுருன்னு சொல்லுவேன், உசுருன்னு சொல்லுவேன்.” அது எங்க கட்சி பிரச்சினை “உங்க மசுருக்கு என்ன என்று சீமான் ரைமிங்கா பேசினார்.
அப்போது ஒரு மாதத்திற்கு மேல் அமைதியாக இருந்த காளியம்மாள் சமாதானம் அடைந்து மீண்டும் கட்சிப் பணியை செய்து வந்தார். அதன் பின்னர் சீமான் வாய்ஸில் ஆடியோ வெளிவந்தது. அதில் காளியம்மாள் குறித்து “உனக்கு தனிய ஆள்களை சேர்த்து கூட்டம் நடுத்தர, செல்போன் பரிசு கொடுக்கிற” என்று பேசியிருந்தார். அவ்வளவுதான் அதன் பின்னர் காளியம்மாள் அமைதியானார். அந்த ஆடியோவிற்கு சீமான் தரப்பில்
மறுப்போ, விளக்கமோ இதுவரை தெரிவிக்கவில்லை. அதுகுறித்து காளியம்மாளும் எதுவும் பேசவில்லை.
ஒரு பெண் ஒட்டுமொத்த கூட்டத்தையும் தன்னுடைய கருத்தாழமிக்க ஆக்ரோச பேச்சினால் கவர்ந்திழுக்க முடியும் என்பதை இந்த ஆணாதிக்க சமூகத்தின் செவுட்டில் அறைந்த சொன்னவர் காளியம்மாள். தற்போது தவெக தரப்பில் காளியம்மாளை அணுகியதாக கூறப்படுகிறது.. ஆனால் தவெக வில் சேர மனமில்லாமல் திராவிட கட்சியில் சேரலாமா என்கிற மன ஓட்டத்தில் இருப்பதாக தகவல்..
காளியம்மாளின் குடும்பம் திராவிட பாரம்பரியமுள்ள குடும்பம் என்றும் அதனால் தவெக வில் சேருவதை விட எதிர்காலமுள்ள திராவிட கட்சியில் சேரலாமா என்கிற எண்ணத்தில் காளியம்மாள் இருப்பதாக கூறப்படுகிறது.