Homeசெய்திகள்அரசியல்பீகாரில் அதிர்ச்சி- வக்ஃபு மசோதாவுக்கு எதிர்ப்பு: நிதிஷ் கட்சி எம்.எல்.ஏ ராஜினாமா..!

பீகாரில் அதிர்ச்சி- வக்ஃபு மசோதாவுக்கு எதிர்ப்பு: நிதிஷ் கட்சி எம்.எல்.ஏ ராஜினாமா..!

-

- Advertisement -

வக்ஃபு திருத்த மசோதாவிற்கு  ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த முஸ்லிம் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான காசிம் அன்சாரி ராஜினாமா செய்தார். இது பீகார் தேர்தலுக்கு முன்பு ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

வக்ஃபு திருத்த மசோதாவிற்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்த பிறகு, கட்சியின் முஸ்லிம் தலைவர்களிடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது. இன்று கட்சியின் மூத்த முஸ்லிம் தலைவர் காசிம் அன்சாரி ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகினார். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் இது கட்சிக்கு ஒரு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மக்களவையில் வக்ஃப் திருத்த மசோதாவை ஆதரித்த ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான லல்லன் சிங், இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்றும், வக்ஃப் வாரியத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்றும் கூறியிருந்தார். இருப்பினும், இதற்கு கட்சிக்குள்ளும் முஸ்லிம் சமூகத்திலும் எதிர்ப்பு உள்ளது.

கட்சியின் முஸ்லிம் தலைவர்கள் இந்த மசோதாவுக்கு தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவித்தனர். முதல்வர் நிதீஷ் குமாரையும் சந்தித்தனர். முஸ்லிம் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதாக நிதிஷ் குமார் உறுதியளித்தார். ஆனாலும், கட்சியின் உயர்மட்டத் தலைமையின் மௌனமும், மசோதா குறித்து தெளிவான நிலைப்பாடு இல்லாததும் காசிம் அன்சாரி போன்ற தலைவர்கள் வருத்தமடைந்து இறுதியில் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்ய வழிவகுத்தது.

முன்னதாக, முஸ்லிம் அமைப்புகள் தாங்கள் எதிர்க்கும் வக்ஃப் மசோதாவின் விதிகள் குறித்த தெளிவான தகவல்களை வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தியது. இதனால் கட்சி இந்தப் பிரச்சினைகளை நாடாளுமன்றக் குழு, அரசின் முன் எழுப்ப முடியும். காசிம் அன்சாரி கட்சியை விட்டு வெளியேறுவது வரவிருக்கும் தேர்தல்களில் ஐக்கிய ஜனதா தளம் முஸ்லிம் வாக்கு வங்கியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

MUST READ