சட்டமன்றம் வந்து மூன்று நிமிடங்கள் கூட நிற்காமல் செல்வதற்கு வீட்டிலேயே லீவ் லெட்டர் கொடுத்தாலே எங்கள் முதல்வர் ஒப்புக்கொல்வார். வீணாக சட்டமன்றம் வந்து அவமானபடாதீர்கள் – ஆளுநர் ஆர் என் ரவிக்கு கனிமொழி எம்.பி. அறிவுரை.
தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தியும் தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் பொன்விழா வளைவு அருகில் நடைபெற்றது .இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி , திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி எம்பி , தயாநிதி மாறன் எம்பி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில் ஆளுநர் ஆரன் ரவியை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

கனிமொழி எம்பி பேசுகையில் – முதல்வர் எழுந்து நின்றாலே பயந்து ஓடுகிறார் ஆளுநர். சட்டமன்றத்தை விட்டு ஓடுவதில் ஹாட்ரிக் எடுத்திருக்கிறார் ஆளுநர் ஆர் என் ரவி. வீட்டிலேயே லீவ் லெட்டர் கொடுத்தாலே எங்கள் முதல்வர் ஒப்புக்கொல்வார்.வீணாக சட்டமன்றம் வந்து அவமானபடாதீர்கள். ஆளுநர் அரசியல் பேச வேண்டிய தேவை இல்லை , அவசியம் இல்லை .வருடம் தொடங்கினால் பொங்கல் வருகிறதோ, பிற பண்டிகைகள் வருவதற்கு முன்பாக ஆர்.என்.ரவி பிரச்சனைகளுடன் வருகிறார். தேசிய கீதத்தை பற்றி ஏன் பேசுகிறீர்கள். உங்களுக்கும் இந்த நாட்டின் விடுதலைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. தமிழ்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்படும் இது தான் எங்கள் பாரம்பரியம். நாட்டை காப்பாற்றுவதற்காக அரசியலமைப்பை காப்பாற்றுவதற்காக ஒரு தேசிய தலைவராக எங்களுடைய தலைவர் உருவெடுத்து உள்ளார். தேசிய தலைமைக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றார் முதல்வர் என கூறியுள்ளாா்.
ஆர் எஸ் பாரதி பேசுகையில் – ஆணவமாகவும், திமிராகவும் ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.தேசிய கீதத்தை அவமதித்தவர் ஆளுநர் தான்.இது தமிழ்நாடு, மிகப்பெரியவர்களை ஓட ஓட விரட்டிய தமிழ்நாடு. இந்தியாவின் தலைசிறந்த முதல் அமைச்சர் ஆக தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கிறார் என்ற வைத்தெரிச்சல் தாங்காமல் ஆளுநர் உள்ளார். ஆளுநர் தகராறு செய்ய செய்ய முதல்வர் புகழ் உச்சமடையும். இவ்வாறு அவர் கூறினார்.நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசுகையில் – பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்துவாயா? – ஆளுநர் ஆரன் ரவிக்கு தயாநிதி மாறன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளா். ஒற்றை குரலில் தமிழ்நாட்டின் மாண்பை சீர்குலைக்கும் ஆளுநரை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் ஆளுநர் தேவையில்லை தேவையில்லை. ஜனாதிபதியும் ஆளுநரை போலத்தான் பிரதமர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்திட வேண்டும்.அரசின் சாதனைகளை தான் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி பேசுவார், அதில் கமா போட கூட ஜனாதிபதிக்கு உரிமை இல்லை. ஐயா எனக்கு கவர்னர் பதவி கொடுங்க என்று கெஞ்சிவிட்டு ஆளுநராக வந்தவர். எப்படியாவது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்துவாயா???
இதுபோன்று தொடர்ந்து செய்தால் தமிழ்நாட்டு மக்கள் உன்னை மன்னிக்க மாட்டார்கள் பின்னணி வேறு மாதிரி இருக்கும். இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு, இந்தியாவின் தலைசிறந்த முதல்வர் நம்முடைய முதல்வர்.ஆளுநரின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது வேகாது என இவ்வாறு அவர் கூறினாா்.