தமிழகத்தில் ஆளுநர் அத்துமீறுவதாக கூறி இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பனகல் மாளிகை அருகில் சைதாப்பேட்டை – தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி , மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் , தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிரான கண்டனம் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டையும், தமிழ்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமதிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி யை கண்டித்து பல்லாவரத்தில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் கண்ட ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது,
திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவரும், தமிழ்நாடு அரசு சமூக நீதி கண்காணிப்புக்குழு தலைவரக உள்ள சுப.வீரபாண்டியன் கண்டன உரையாற்றுகிறார், மேலும் இந்த ஆர்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, வரலஷ்மி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர்.ஜி.காமராஜ் உள்ளிட்ட ஆயிதத்திற்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழ் நாட்டையும் தமிழ் தாய் வாழ்த்தையும் அவமதிப்பதாக கூறி தமிழக ஆளுநரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம். திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் தலைமையில் ஆவடி பேருந்து நிலையம் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.ஒன்றிய அரசுடன் கள்ளக் கூட்டணியில் உள்ள அதிமுகவை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்..