வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான மக்களவை உறுப்பினர் சான்றிதழை டெல்லியில் பிரியங்கா காந்தியிடம் வழங்கினர் கேரள காங்கிரஸ் தலைவர்கள் . தனது பங்கிற்கு பிரியங்கா காந்திக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மகிழ்ந்தார் ராகுல் காந்தி.
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட்டு தனக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளரை விடவும் 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிரியங்கா காந்தி வெற்றி பெற்றதற்காக தேர்தல் அதிகாரிகளால் வழங்கப்பட்ட சான்றுகளை காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில முன்னணி தலைவர்கள் இன்று பிரியங்கா காந்தியிடம் டெல்லியில் நேரில் வழங்கினர்.

டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து வயநாடு மக்களவை உறுப்பினருக்கான சான்றிதழை நேரில் வழங்கியதோடு வாழ்த்தும் தெரிவித்து கொண்டனர். பிரியங்கா காந்தியும் தன்னுடைய வெற்றிக்காக அயராது உழைத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. நிகழ்சியின் போது உடனிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவரது சகோதரி பிரியங்கா காந்திக்கு இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தும் மகிழ்ந்தார்.
தூத்துக்குடி மீனவர்கள் கைது …. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி வலியுறுத்தல்