ராகுல் காந்தி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை
நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 263 இடங்களிலும் இந்தியா கூட்டணி (INDIA) 229 இடங்களிலும், மற்றவை 32 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல், கேரள மாநிலம் வயநாடு மற்றும் உ.பி., மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். ஓட்டுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இரு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளார்.
வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 41,397 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
அதனைதொடர்ந்து ரேபரேலி தொகுதியில் 2,126 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.