spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ராமதாஸே நம்முடைய குலதெய்வம்…அன்புமணியின் நடவடிக்கையில் மாற்றம்!

ராமதாஸே நம்முடைய குலதெய்வம்…அன்புமணியின் நடவடிக்கையில் மாற்றம்!

-

- Advertisement -

பனையூர் இல்லத்தில் 2-வது நாளாக நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது பேசிய அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸின் கொள்கைகளை கடைபிடித்து வெற்றிபெறுவோம், ராமதாஸ் அய்யா தான் நம்முடைய குலதெய்வம் என உருக்கமாக பேசியுள்ளாா்.ராமதாஸே நம்முடைய குலதெய்வம்…அன்புமணியின் நடவடிக்கையில் மாற்றம்!பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் இடையிலான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஒருபுறம் தைலாபுரத்தில் மூத்த நிர்வாகிகளுடன்  ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறாா். மறுபுறம் சோழிங்கநல்லூரில் மாவட்ட நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் உடன் அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறாா். இன்று இரண்டாவது நாளாக கூட்டம்  நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பேசிய அன்புமணி, நம் கட்சியை நாம் மேலும் வலுப்படுத்தவும், பலப்படுத்தவும் வேண்டும். அதற்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி நீண்ட இடைவெளிக்கு பின் நம்து உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க வேண்டும்.

ராமதாஸ் அய்யா நம்முடைய  குல தெய்வம். நம் கொள்கையின் வழிகாட்டி. இக்கட்சியை தொடங்கி 45 ஆண்டுகாலம் உழைத்திருக்கிறார். அவரின் தொலைநோக்கு சிந்தனை கொண்டவர், சமூக நீதி, ஜனநாயகம், சமத்துவம் ஆகியவற்றின் பாதையில் பயணித்தவர். இவற்றை எல்லாம் கடைபிடித்து முன்னேறுவோம். வெற்றி பெறுவோம். தமிழ்நாட்டை யாராரோ ஆண்டார்கள்.ராமதாஸே நம்முடைய குலதெய்வம்…அன்புமணியின் நடவடிக்கையில் மாற்றம்!

we-r-hiring

நமக்கான காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. நாம் வெற்றிகரமாக நடத்தி காட்டிய மாநாடு இன்றும் இளைஞர்கள் மனதில் இருக்கின்றது. எனவே அவர்களை போய் சந்தித்து கட்சியில் இனையுமாறு கேளுங்கள். வேறு எங்கும் செல்ல மாட்டார்கள். நம்முடன் வந்துவிடுவார்கள். ஒருமுறை நம்முடன் சேர்ந்து விட்டால் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள். உங்கள் அனைவரிடமும் நான் மூன்று விஷயங்களை கூறிக் கொள்கிறேன்.

ஒன்று புதிய உறுப்பினர்களை இனைக்க வேண்டும். இரண்டாவது புதிய கிளை நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும். மூன்று வாக்குச்சாவடி முகவர்கள் 10 பேரை நியமித்தல். அடுத்தகட்டமாக தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ளப் போகிறேன். இதை நீங்கள் தான் செய்ய வேண்டும்.  கட்சியின் மாற்றங்கள் தொடர்பாக ஏதேனும் அறிவிப்புகள் வரலாம். அதையெல்லாம் நான் பார்த்து கொள்கிறேன்.ராமதாஸே நம்முடைய குலதெய்வம்…அன்புமணியின் நடவடிக்கையில் மாற்றம்!நமது கட்சிக்கென விதிகள் பின்பற்றபடுகின்றது. பொதுக்குழு அமைத்து முறையாக தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட , உங்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவன் நான். தலைவர் தான் நியமனம் செய்ய வேண்டும். பொதுக்குழுவை தலைவர் தான் கூட்ட வேண்டும்.

அதேபோல் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் குழப்பங்கள் எல்லாம் விரைவில் சரியாகும். உங்களின் மனக் குமுறல்கள் அனைத்தையும் நான் அறிவேன். எனக்குள்ளும் ஏகப்பட்ட விஷயங்கள் ஏற்பட்டுள்ளது. என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு அது புரியும். நம்முடைய கட்சி தான் நமக்கு மிகப்பெரிய பலம். நம் கட்சியை போன்று வேறு எந்த கட்சியும் தமிழ்நாட்டில் கிடையாது. நம்முடைய கனவானது,  பாமக தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதே. நீங்கள் அனைவரும் தைரியமாக இருங்கள். உங்களை யாரும் எதுவும் செய்து விடமுடியாது.

கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் எதுவும் செய்து விடமுடியாது. உங்களுக்கு துணையாக நான் இருக்கிறேன், தொடர்ந்து கட்சி பணிகளை மேற்கொள்ளுங்கள். நமது கட்சிக்காக விரைவில் மொபைல் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்த போகிறேன். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து உங்களின் அனைத்து விதமான பிரச்சினைகள் குறித்தும் அதில் பதிவு செய்யலாம். கிளை, வட்டம், மாவட்ட அளவில் என அனைத்தும் என் கண்காணிப்புக்குள் வந்துவிடும். அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்வேன் என்று அன்புமணி கூறியுள்ளாா்.

அன்புமணியின் புதிய திட்டம்! ரகசியத்தை உடைக்கும் உமாபதி!

MUST READ