விஜய் அரசியலுக்கு வர வேண்டும்- சீமான்
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான கேள்வி பதில் அளித்த சீமான், விஜய் அரசியலுக்கு வர வேண்டும், அதை வரவேற்பேன். நான் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியதில்லை, விஜய் தான் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். விஜய் அரசியலை நோக்கி வருவது அவரது இயக்கத்தினரின் செயல்பாடுகள் மூலம் தெரிகிறது. தற்போது நான் மட்டுமே உள்ளேன், விஜய் அரசியலுக்கு வந்தால் இன்னும் வலிமையாக இருக்கும்.
அரசியல் முயற்சிகளை தொடங்கவே விஜய் முயற்சி செய்கிறார். திமுக, அதிமுகவை வைத்து அரை நூற்றாண்டுகளை இந்த மண் கடந்துவிட்டது. நான் யாரையும் ஆதரிப்பது கிடையாது விஜய் கட்சி தொடங்கினால் என்னை ஆதரிக்கட்டும். சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதால் தமிழ்நாடு சுடுகாடாகா மாறிவருகிறது” எனக் கூறினார்.