Homeசெய்திகள்அரசியல்தமிழகத்தில் ஒரு கட்சியை சார்ந்துதான் அரசியல் செய்ய வேண்டுமா? - செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் ஒரு கட்சியை சார்ந்துதான் அரசியல் செய்ய வேண்டுமா? – செல்வப்பெருந்தகை

-

தமிழகத்தில் ஒரு கட்சியை சார்ந்துதான் அரசியல் செய்ய வேண்டுமா? என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஒரு கட்சியை சார்ந்துதான் அரசியல் செய்ய வேண்டுமா? - செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம், இன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், எவ்வளவு நாள் சார்ந்து இருப்பது! நாம் சுயமாக நிற்க வேண்டும் என்று அவர் பேசியுள்ளார்.

பாசிசத்தை வீழ்த்தும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஆட்சியில் இல்லை. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பாஜக ஆட்சியில் இருந்தாலும் வருத்தமாகவே இருக்கிறார்கள். மோடிக்கு கடிவாளம் போட்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒரு கட்சியை சார்ந்துதான் அரசியல் செய்ய வேண்டுமா? - செல்வப்பெருந்தகை

வரும் காலங்களில் நாம் சார்ந்து இருக்க போகிறோமா? சுயமாக இருக்க போகிறோமா? என்பதை மனதில் வைத்து தலைவர்கள் பொதுக்குழுவில் பேச வேண்டும். எத்தனை காலம் சார்ந்து இருக்க போகிறோம், நமது இயக்கத்திற்கு என்று வரலாறு உண்டு.

அனைவருக்கும் குரல் கொடுக்கும், அனைத்து மக்களையும் அரவனைக்கும் சிந்தாந்தம் உள்ள கட்சி காங்கிரஸ் கட்சி. வேறு எந்த கட்சிக்கும் அது கிடையாது.

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிப்பு (apcnewstamil.com)

நாம் எந்த திசையில் செல்கிறோம் என்பதை தலைவர்களும் தோழர்களும் முடிவு செய்ய வேண்டும். தோழமை என்பது வேறு, சார்ந்து இருப்பது வேறு. உண்மையான தோழமை கட்சி என்றால் அது காங்கிரஸ் தான். ஆனால் நாம் எவ்வளவு நாள் சார்ந்து இருக்க போகிறோம் என்கிற கேள்விக்கு நீங்கள் தான் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு செல்வப் பெருந்தகை பேசினார்.

MUST READ