சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கரூர் எம்பி ஜோதிமணி பேசுகையில் , ஆ என்று சொன்னாலே அவையை ஒத்தி வைத்து விடுகிறார்கள். பிரதமருக்கு இந்த ஊழலில் தொடர்பு உள்ளது ஜோதிமணி எம் பி பேச்சு.
அதானி பிரச்சினையை பொறுத்தவரை இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது . அதானி ஒன்றும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் கிடையாது .இந்திய அரசாங்கத்தின் சட்டத்திற்கு உட்பட்டவர் தான் அதானி. அதனால் அதானியை கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். பிரதமருக்கு இந்த ஊழலில் தொடர்பு உள்ளது. நாடாளுமன்றத்தில் அதானி என்று கூட இல்லை ஆ என்று சொன்னாலே அவையை ஒத்தி வைத்து விடுகிறார்கள் அந்த அளவிற்கு வெளிப்படையாகவே அதானியை காப்பாற்றும் போக்கு உள்ளது. இந்தியாவில் விமான நிலையங்கள், அலைக்கற்றைகள் , நிலக்கரி , மின்சாரம் இவை அனைத்தும் ஒரே ஒரு நிபந்தனையும் பின்பற்றாமல் ஆர்டர் கிடைக்கிறது அதனாலதான் நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி போராடி வருகிறது.
தொடர்ந்து விஸ்வகர்மா திட்டத்தின் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், சாதியை ஒழிப்பதற்கு தான் நாம் போராடி வருகிறோம் .காலம் காலமாக பெரியார் காமராஜர் அண்ணா உட்பட அனைவரும் எதை ஒழிக்கப் போராடினார்களோ அதை பாரதிய ஜனதா அரசு கொண்டுவர முயற்சிக்கிறது .அதனை தமிழ்நாடு உட்பட முற்போக்கான மாநிலங்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை எம் பி சுதா ராஜேந்திரன் கூறுகையில் , டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது , கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது . டெல்டா மண்டலம் பாதுகாக்கப்பட்ட மண்டலம் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது. புதிதாக எந்த நிறுவனத்திற்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை , ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டு காலம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இச்செய்தி அதிர்ச்சியாக உள்ளது. கடந்த காலங்களில் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டதாகவும் நாங்கள் தான் இதன் பாதுகாவலர்கள் என்றும் அவர் கூறினார் .ஆனால் மத்திய அரசிடம் இருந்து வந்த இந்த பதில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றியுள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இதற்கு முன்பு இருந்த அரசாங்கத்தின் முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிச்சாமி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததாகவும் ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தால் ஆனால் பிறகு எப்படி மூன்று ஆண்டுகள் என்ன நிறுவனங்களுக்கு நீட்டிப்பு உத்தரவை மத்திய அரசால் வழங்க முடியும் .டெல்டா மாவட்ட விவசாயிகளையும் அந்த பூமியையும் காப்பாற்றுவது எங்கள் கடமை. அதற்காக தொடர்ந்து போராடுவோம். என்று அவர் தெரிவித்தார்.