சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை எந்த சமூக வலைதளம், பொதுவெளி, தொலைக்காட்சிக்கு விசிகவினர் யாரும் தலைமை அனுமதியின்றி பேட்டி அளிக்கக்கூடாது – திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளாா்.இனிவரும் காலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் வரை தலைமையின் அனுமதியின்றி விசிகவை சார்ந்த யாரும் சமூக வலைதளங்களிலோ தொலைக்காட்சிகளிலோ எந்த ஒரு பேட்டியும் அளிக்கக்கூடாது. மற்ற தோழமைக் கட்சிகளை குறித்தோ கட்சிகளின் நிலைப்பாடுகளை குறித்தோ யாரும் கண்மூடித்தனமாக விமர்சனம் செய்யக்கூடாது.
சமீபத்தில் கோபி நயினர் திராவிடர் கழகம் பற்றி பேசியது அதன் பிறகு எழுந்த விமர்சனங்கள் எல்லாம் பேசு பொருளாகி உள்ளது. எந்த கருத்து வேறுபாடு இருந்தாலும் அரங்குக்குள்ளே இருக்க வேண்டுமே தவிர கட்சியை சேர்ந்த யாரும் பொதுவெளியில் இதுபோன்று பேசக்கூடாது. கட்சி நிர்வாகிகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தல்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே 140 ஏக்கர் நிலம்! ஐரோப்பிய சினிமா துறைக்கு ஈடாக ஸ்டூடியோ-நாசா் புகழாரம்