பாஜக வளர்ந்தால் ஆபத்து- எச்சரிக்கும் திருமா
பாஜக வளர்ந்தால் அம்பேத்கார் அரசியல் அமைப்பு சட்டத்திர்க்கு ஆபத்து என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே மாத்தூர் பகுதியில் கட்சி மாவட்ட செயற்குழு நிர்வாகி சம்பத் தாயார் லட்சுமி படத்திறப்பு விழாவில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும், அம்பேத்கர் வழியை பின்பற்ற அமைப்பாய் திரள்வோம். சேரிப் பகுதிகளில் பிஜேபி உள்நுழைய பார்க்கிறது. கொடியேற்ற அனுமதிக்காதீர்கள். அதிமுகவிற்கு ஆலோசனை சொல்வதற்கு நான் ஆலோசகர் இல்லை. அதிமுக முதுகில் பாஜக சவாரி செய்ய நினைக்கிறது. பாஜக தமிழகத்தில் வளர்ந்தால் அதிமுக நீர்த்து போய்விடும். திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர உள்ளதாக சிலர் நெருப்பு அள்ளி வீசுகிறார்கள்” எனக் கூறினார்.