விஜய் வருகைக்காக காத்திருந்த மக்கள். அளவுக்கு அதிகமாக கூடிய கூட்டத்தால் அடுத்தடுத்து மயங்கி விழுந்த பெண்களாள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது மாவட்டம் வாரியாக மக்களை சந்தித்து பரப்புரை செய்து வருகிறார். இன்று (செப்டம்பர் 20) நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அவர் பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார்.

நாகையில் அண்ணா சிலை அருகே நடைபெறும் பரப்புரை நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. தவெக தலைவர் விஜய் திருவாரூர் தெற்கு வீதிக்கு இன்னும் வரவில்லை. அவரைக் காண அதிக அளவில் பொதுமக்கள் திரண்டுள்ளனர்,அளவுக்கு மீறி கூட்டம் கூடியதால் அங்கு காத்திருந்த மக்களில் பெண்மணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக த.வெ.க. தொண்டர்கள் தூக்கிச் சென்றனர். இதற்கிடையில் மேலும் சில பெண்கள் மயங்கி விழுந்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஒருவர் ஏறியபோது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் அரசு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.