டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியபோது, அவருடைய நெருக்கமான உறவினர்களும் உடன இருந்ததாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி முழுக்க ரெய்டு வாங்கியுள்ளார். இந்த சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி. முனுசாமி, இன்பதுரை மட்டுமின்றி தன்னுடைய நெருங்கிய உறவினர்களையும் அழைத்துச் சென்றுள்ளார். அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை என்பது பாஜக – அதிமுக இடையிலான பேச்சுவார்த்தையாகும். இது அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையாகும். அதற்கு அதிமுக நிர்வாகிகள் மட்டும் போதாதா? பேச்சுவார்த்தையின்போது எடப்பாடியின் உறவினர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு என்று ஒரு தனி விசாரணை நடைபெற்றுள்ளது. வேலுமணிக்கு, ஓரு தனி விசாரணை நடைபெற்றுள்ளது. இவ்வளவு விஷயங்கள் அங்கே நடைபெற்றுள்ளன.
அங்கு எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களிடம் விடப்பட்ட ரெய்டை குறித்து நான் சமூக வலைதளத்தில் சொன்னேன். எடப்பாடி அமித்ஷா உடன் கடுமையாக மோதுகிறார். திகார் சிறை என்கிற வார்த்தை பல முறை கேட்கிறது என்று நான் பதிவிட்டேன். அப்போது யார் சிறைக்கு செல்லப் போவது என்கிற கேள்வி எழலாம். உண்மையில் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் தான் திகார் சிறைக்கு செல்ல உள்ளனர். அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தபோதே, எடப்பாடியின் உறவினர்கள் சில வழக்குகளில் சிக்கியுள்ளனர். அதை வைத்து எடப்பாடி மிரட்டப்பட்டு தான் கூட்டணி சேர்த்தார்கள் என்று நான் உள்ளிட்ட பலரும் சொன்னார்கள்.

அதில் விமானம் வாங்கிய விவகாரமும் உள்ளது. இங்கு ஊழலில் சம்பாதித்த பல நூறு கோடி ரூபாய் பணம் வெளிநாடுகளில் முதலிடு செய்யப்பட்டுள்ளது. இது சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் வருவதாகும். நொந்துபோன எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து வெளியே வருகிறபோது முகத்தை மூடிக்கொண்டு வந்தார். இது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக முகமூடியை அணிந்துகொண்டு வந்தார். ஏன் அவர் அரசு காரில் வரவில்லை. இசட் பிளஸ் காரில் எடப்பாடி பழனிசாமி வந்தார் என்றால் அவரை யாரும் கேள்வி கேட்கப்போவது இல்லை. தன்னுடைய நெருக்கான உறவினர்களிடம் நடைபெறும் விசாரணையை எடப்பாடி பழனிசாமி பார்க்கிறார். அந்த விவரங்களை எல்லாம் அமித்ஷா தூக்கி தூக்கி போடுகிறார். தேர்தல் கூட்டணி அமைந்தபோது விமானம் வாங்கியது தொடர்பான விவரங்கள் கிடைத்தன. அதில் அந்நிய செலாவணி மோசடி புகார் எழுந்தது. அதை தாண்டி நிறைய விஷயங்களை தற்போது செய்துள்ளனர்.

அதிமுகவில் அதிருப்தி தலைவர்களை உருவாக்குவதே பாஜக தான். செங்கோட்டையனை நாங்கள் ஊக்குவிக்க மாட்டோம் என்று பாஜகவினர் சொல்கின்றனர். உண்மையிலேயே செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தாரா? இதை அமித்ஷா தரப்பு இதுவரை உறுதிபடுத்தவில்லை. டெல்லிக்கு சென்ற செங்காட்டையன் நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரை சந்தித்தாரா? அல்லது அமித்ஷாவை சந்தித்தாரா? அல்லது செங்கோட்டையன் சொன்ன குற்றச்சாட்டுகளுக்காக தான் எடப்பாடி பழனிசாமி வரவழைக்கப்பட்டாரா? இவை எல்லாம் பொதுவெளியில் எழுந்துள்ள கேள்விகள். இதற்கு அமித்ஷாவும் பதில் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமியும் பதில் சொல்லவில்லை. செங்கோட்டையன் மட்டும் சொன்னார் நான் அமித்ஷாவை சந்தித்தேன் என்று. இந்த நிலையில், டெல்லி சென்ற குழுவில் தங்கமணி ஒதுக்கப்பட்டு உள்ளார். நாளைக்கு அவர் திடீரென போர்க்கொடி தூக்கினார் என்றால்? மத்திய அமைச்சர்களை சந்திக்கிறார் என்றால் என்ன ஆகும்?.
செங்காட்டையன் முதலில் எம்ஜிஆர் – ஜெயலலிதா படத்தை போடவில்லை என்று பிரச்சினை செய்தார். அவரை நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். அவர்தான் செங்கோட்டையனை அமித்ஷாவிடம் கூப்பிட்டு போனார். தற்போது இரண்டாவது முறையாக போர்க்கொடி தூக்கியுள்ளார். அவருக்கு 2 ஒன்றியங்களில் செல்வாக்கு உள்ளது. 3 சட்டமன்றத் தொகுதிகளில் 10 சதவீதம் வாக்குகள் உள்ளன. ஆனால் செங்கோட்டையனை நிர்மலா சீதாராமனும், அமித்ஷாவும் அழைத்து பேசுகிறார்கள். இது எந்த வகையில் சரியானது என்பதுதான் கேள்வி. ஆனால் அதற்கான விளக்கம் வரவேயில்லை. இந்த விவகாரத்தில் பாஜக ஒட்டுமொத்தமாக காமாண்ட் எடுக்க பார்க்கிறது. பாஜக சாதகமான எண்ணிக்கையிலான தொகுதிகளை பெற நினைக்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் அரசியல் சூழல் குறித்து உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளது. அதில் விஜய்க்கு குறிப்பிட்ட சதவீதம் வாக்குகள் உள்ளதாக அறிக்கை போகிறது. அதன் அடிப்படையில் பல தொகுதிகளை பாஜக கணக்கிட்டு வைத்துள்ளது. அந்த தொகுதிகளை எல்லாம் அதிமுக கொடுக்க வேண்டும். அங்கு தேர்தலை சந்திக்க அதிமுக பணமும் கொடுக்க வேண்டும். அதிமுக – பாஜக இடையே தொன்று தொட்டு சுமூகமான உறவு உள்ளதாக சொல்வதற்கு காரணம், அதிமுக கப்பம் கட்டியதால்தான் இந்த உறவுகள் நீடித்தது. குஜராத், கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்களுக்கு அதிமுக பணம் கொடுத்துள்ளது. அப்போது, தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தல் என்பதால் தொகுதிக்கு 10 கோடி வழங்கிட வேண்டும். அதை ஊழல் செய்து சம்பாதித்து வைத்துள்ள பணத்தில் வழங்கிட வேண்டும்.

நீங்கள் ஊழலே செய்யவில்லை என்று சொல்ல முடியாது. உங்களுடைய உறவினர்களே மாட்டிக்கொள்கிற அளவுக்கு தப்பு செய்துள்ளனர். இதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவர்களை துக்கி திகார் சிறையில் போட்டு விடுவேன். அதிமுக தொகுதிகளை தர வேண்டும், அதற்கு ஏற்றார்போல் காசு தர வேண்டும். எடப்பாடி பழனிசாமி, தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை சேர்க்க மாட்டேன் என்றும், சசிகலா வந்தால் கட்சியை காலி செய்து விடுவார் என்றும் அமித்ஷாவிடம் வாதிட்டுள்ளார். அந்த விவகாரத்தில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. எடப்பாடி, அவருடைய உறவினர்கள், வேலுமணியை தவிர்த்து வேறு யாருக்கும் அங்கு என்ன நடந்தது என்று தெரியாது. அமித்ஷா வாயை திறந்தால்தான் தெரியும். குருமூர்த்தி வாயை திறந்தால்தான் தெரியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


