Homeசெய்திகள்அரசியல்‘என்னை ஒரு சகோதரியாக நீங்கள் பார்த்திருக்க வேண்டும்’: விஜய் மாநாடு தொகுப்பாளினி வேதனை

‘என்னை ஒரு சகோதரியாக நீங்கள் பார்த்திருக்க வேண்டும்’: விஜய் மாநாடு தொகுப்பாளினி வேதனை

-

- Advertisement -
kadalkanni

விஜய்யின் பிரமாண்ட தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய்க்கு சமமாக வைரலாகி, விமர்சனங்களுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார் தொகுப்பாளர் துர்காதேவி.

‘தளபதி இதோ வந்துவிட்டார்… அதோ வந்துவிட்டார்’ என ஆரவாரத்தோடு துர்காதேவி தொகுத்து வழங்கியது, மீம்ஸ்களாக இணையமெங்கும் பரவியது. இந்நிலையில், இந்த விமர்சனங்கள் பற்றி பேசிய அவர், ‘‘என்னை ஒரு சகோதரியாக நீங்கள் பார்த்திருக்க வேண்டும். நம்மவரில் ஒருத்தி விஜய் மாநாட்டை தொகுத்து வழங்கி இருக்கிறாளே என்று நினைத்து இருக்க வேண்டும். ஆனால் பெண் தொகுப்பாளர்களான நீங்களே அதை செய்யவில்லை. பரவாயில்லை. வீட்டில் அக்கா, தங்கச்சி செல்லச் சண்டை போட்டது போல இதை நான் எடுத்துக் கொள்கிறேன்.தவெக மாநாடு

எனக்கு ஒரு பின்புலம், ஒரு நிறம் இருந்தாதான் ரசிப்பீங்களா? பாராட்டுவீங்களா? ரெஸ்பான்ஸ் கொடுப்பீங்களா? நல்ல குரல்; வெளீர் நிறம் இருக்கணும்னு நினைப்பதே தவறான சிந்தனை. நான் தமிழச்சி. தமிழ் மண்ணை; தமிழ் மக்களை நம்பித்தான் பேசினேன். எல்லா மேடையிலும் ‘தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும்’ அப்படின்னுதான் பேசவே ஆரம்பிப்பேன். அப்படியிருக்கும்போது, என்னோட குரலை, நிறத்தை வெச்சு விமர்சிக்கிறதை ஏற்றுக்க முடியாது.

திறமையைத்தான் பார்க்க வேண்டும். மாநாட்டுக்கு 8 லட்சம் பேர் வந்திருந்தார்கள். அத்தனை ஆண்கள் கூட்டத்தை ஒரு 28 வயசு இளம்பெண் குரலால் கட்டுக்குள் வெச்சிருந்ததைத்தான் முக்கியமா பார்க்கணும்.

சில தொகுப்பாளர்கள் ‘எனக்கு அந்த வாய்ப்பு வந்திருக்கலாம். இதுக்கு நானே பேசிருப்பேன்’ அப்படின்னெல்லாம் சொல்றாங்க. பிரபலமானவங்கதான் மேலும் பிரபலமாகணும்னா, என்னை மாதிரி கிராமத்துப் பெண்கள் என்னைக்கு வெளியில் தெரிவது? வெளியில் வருவது? எங்களுக்கெல்லாம் என்னைக்கு அங்கீகாரம் கிடைக்கிறது? பாரதி சொன்ன மாதிரி அடுப்பூதிக்கிட்டே இருக்கணுமா? இதெல்லாம் ரொம்ப பின்னோக்கிய சிந்தனைகள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்த துர்காதேவி வர்ணையாளராக அசத்தினார். விஜய் ரசிகரான துர்காதேவி ஆரம்ப காலத்தில் இருந்து அவரை பற்றி கவிதை எழுதியும் வந்தார். இதனை தொடர்ந்து அவர் விஜய் மக்கள் இயக்கத்தில் பேச்சாளராக சேர்ந்தார்.

 

MUST READ