அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் அக்கட்சியின் கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்றாா்.
சேலத்தில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்த போது, “தர்மபுரியில் அமமுக மக்கள் கட்சியின் கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்வதற்காக செல்கிறேன். அதிமுக செயற்குழு, பொதுக் குழு பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தேர்தலை நோக்கி எங்கள் பயணம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலையை நான் அரசியலுக்காக சந்திக்கவில்லை, அரசியல் மூலம் பழகினாலும், அவரும் நானும் நல்ல நண்பர்களாக இருக்கின்றோம். அந்த காரணத்தினால் கோயம்புத்தூரில் அவரை சந்தித்ததால் நட்பு ரீதியாக சந்தித்து பேசினோம். இதில் அரசியல் இல்லை.
நீதிமன்ற வழிகாட்டுதல் படி தான், விஜய் கூட்டத்திற்கு கூட்டங்கள் நடத்துவதற்கு விதிகள் நிர்ணயிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கேட்கின்ற நிபந்தனைகளை நிறைவேற்றி தர வேண்டும். செங்கோட்டையன் பாடும் பாடலுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது என்று எனக்கு தெரியாது, கற்பனையாக நான் எதுவும் சொல்ல முடியாது. இந்து கோயில்கள் யார் இடித்தார்கள், எதற்காக இடித்தார்கள் என்று தெரியாமல் சொல்லக்கூடாது. இந்து கோயில்கள் சாலை விரிவாக்கத்திற்காக மக்கள் ஒப்புதலோடு இடிக்கப்பட்டிருக்கலாம். திருப்பரங்குன்றத்தில் முருகன் பெயரை சொல்லி, எந்த ஒரு அரசியல் இயக்கமோ , அரசியல் அமைப்போ , அரசியல் செய்யக்கூடாது. அங்கு மதங்களை எல்லாம் கடந்து வாழ்கின்ற மக்களிடையே இது போன்ற குழப்பம் விளைவிப்பதின் மூலம் தமிழ்நாடு முழுவதும் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும், அதை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விரும்பவில்லை.

எந்த ஒரு அரசியல் கட்சியும் , வெற்றி பெற்று நாம் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பது கோட்பாடு, கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்படும். தேவையான சீட் என்றால் கூட்டணி ஆட்சி தான் வரும் , அது போன்ற வாய்ப்புகள் வரலாம்.
வேறு ஒரு கட்சியை பற்றியோ , வேறு ஒருவரை பற்றியோ கேள்வி கேட்டால் அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். எங்களைப் போன்ற ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு, அதை நோக்கித்தான் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு சரியில்லை, கொலை, கொள்ளைகள் அதிகமாக உள்ளது. அதற்கு முதல் காரணம் போதை மருந்து பழக்கம் தான், இதனால் கொலை, கொள்ளை , பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகமாகி உள்ளது. தவெக தலைமையில் ஒரு வலிமையான கூட்டணி அமைந்தால், அது திமுக தலைமைக்கு கடுமையான போட்டியாக இருக்கும். சில கட்சிகள் எங்களோடு கூட்டணிக்கு வர வேண்டும் என்று பேசி வருகிறார்கள், முடிவு எடுத்த பிறகு வெளிப்படையாக சொல்கிறோம் என்று ஓபிஎஸ், குறித்த கேள்விக்கு பதிலளித்தாா்.
பாண்டிச்சேரி தமிழ்நாட்டை விட சிறப்பாக உள்ளது என்பது விஜயின் கருத்து, என்னுடைய கருத்து அது கிடையாது. தமிழ்நாட்டில் எந்த கட்சி மீதும் எங்களுக்கு பொறாமையில்லை என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
வேளச்சேரி தனியார் வங்கியில் ஒன்றே கால் கிலோ நகையை விட்டுச்சென்ற பெண்ணால் பரபரப்பு!


