Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலை மந்திரத்தை அமித்ஷா ஓதியது ஏன்? 25 பாஜக எம்பிக்கள் தமிழகத்தில் இருந்து டெல்லி செல்ல...

அண்ணாமலை மந்திரத்தை அமித்ஷா ஓதியது ஏன்? 25 பாஜக எம்பிக்கள் தமிழகத்தில் இருந்து டெல்லி செல்ல முடியுமா?

-

அண்ணாமலை மந்திரத்தை அமித்ஷா ஓதியது ஏன்? 25 பாஜக எம்பிக்கள் தமிழகத்தில் இருந்து டெல்லி செல்ல முடியுமா?
அமித்ஷா அண்ணாமலை

மிழகத்தில் இருந்து 25 பாஜக எம்பிக்கள் டெல்லி செல்ல வேண்டும் என்கிற அண்ணாமலை வார்த்தையை அமித்ஷாவும் பேசி கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் பாஜக வெல்லும் தமிழகத்தில் இருந்து 25 பாஜக எம்பிக்கள் டெல்லிக்கு செல்வார்கள் என்று அழுத்தமாக சொல்லி வருகின்றார் அண்ணாமலை. இதை அடிக்கடி சொல்லி ‘அண்ணாமலை மந்திரம்’ போல் கேட்டு வருகின்றனர் கட்சியினர். ஆனால் தமிழகத்தை பொறுத்த வரைக்கும் கூட்டணியில் அதிமுகவிற்கு தான் முக்கியத்துவம் உள்ளது. அதிமுக பாஜகவுக்கு அத்தனை இடங்களை ஒதுக்குமா என்பது கேள்விக்குறி தான். ஒரு வேளை டெல்லியின் அழுத்தத்தால் அதிமுக 25 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்குமா என்றாலும் அதற்கும் வாய்ப்பில்லை என்றுதான் தெரிகிறது, எடப்பாடி பழனிச்சாமியின் சில அதிரடி நடவடிக்கைகளை பார்க்கும் போது.

அண்ணாமலை மந்திரத்தை அமித்ஷா ஓதியது ஏன்? 25 பாஜக எம்பிக்கள் தமிழகத்தில் இருந்து டெல்லி செல்ல முடியுமா?
அமித்ஷா பேச்சு

40 தொகுதிகளில் 25 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கி விட்டால் மிச்சமுள்ள தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை ஒதுக்க முடியும்? தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் அதிமுக தான் எத்தனை இடங்களில் போட்டி இட முடியும்? பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவருடைய விருப்பத்திற்கு பேசிக் கொண்டிருக்கிறார் . ஆனால் கூட்டணி பேச்சு வார்த்தையில் எல்லாம் மாறிவிடும் என்று அதிமுகவினரும் பாஜகவில் இருக்கும் சிலருமே சொல்லி வருகின்றனர் . ஆனால் அண்ணாமலையின் பேச்சைத் தான் அமித்ஷாவும் பேசி இருக்கிறார் என்பது தான் தற்போதைய அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜக 25 இடங்களில் வெல்ல வேண்டும் என்று அண்ணாமலையின் வார்த்தையை அமித்ஷா பேசியிருக்கிறார்.

அண்ணாமலை மந்திரத்தை அமித்ஷா ஓதியது ஏன்? 25 பாஜக எம்பிக்கள் தமிழகத்தில் இருந்து டெல்லி செல்ல முடியுமா?
அமித்ஷா

கிண்டியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியபோது, வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக 25 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்று அமித்ஷா குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் பரவுகிறது .

அண்ணாமலை மந்திரத்தை அமித்ஷா ஓதியது ஏன்? 25 பாஜக எம்பிக்கள் தமிழகத்தில் இருந்து டெல்லி செல்ல முடியுமா?
பாஜக

வழக்கம்போல் அதிமுகவினர் இதை மறுத்து வருகின்றனர். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, ’’கூட்டணி பேச்சு வார்த்தைக்கு முன்னதாக எத்தனை தொகுதி என்பதை முடிவு செய்ய முடியாது. கூட்டணி பற்றி எல்லாம் அதிமுக தலைமை தான் முடிவு செய்யும். தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை’’ என்று ஒரு போடு போட்டுவிட்டார்.

பாஜகவுக்கும் இந்த நிதர்சனம் ஒன்றும் தெரியாமலில்லை. ஆனாலும், அண்ணாமலை போகும் ரூட்டில் போவதுதான் சரி என்று நினைக்கிறது.

அண்ணாமலை மந்திரத்தை அமித்ஷா ஓதியது ஏன்? 25 பாஜக எம்பிக்கள் தமிழகத்தில் இருந்து டெல்லி செல்ல முடியுமா?
பாஜக அதிமுக

ஒது ஒரு புறமிருக்க, கூட்டணியில் இருக்கும்போது, பாஜக தனியாக தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி இருப்பது குறித்தும் ஒரு சலசலப்பு எழுந்திருக்கிறது. இதற்கு பாஜக நிர்வாகி குஷ்பு, ’’கூட்டணி கட்சியில் இருந்தாலும் தங்கள் கட்சியை வளர்ப்பதற்கு தனியே சில வியூகங்களை வகுக்கத்தான் வேண்டும். அதைத்தான் இன்று நாங்கள் செய்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது’’என்று கேட்டு சமாளித்து வைத்திருக்கிறார்.

MUST READ