spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லோகேஷ்க்கு லவ் யூ சொல்லி வாழ்த்து - சஞ்சய் தத்

லோகேஷ்க்கு லவ் யூ சொல்லி வாழ்த்து – சஞ்சய் தத்

-

- Advertisement -

லோகேஷ்க்கு லவ் யூ சொல்லி வாழ்த்து கூறிய சஞ்சய் தத்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை இயக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் 2017ம் ஆண்டு சந்தீப் கிஷான், ஸ்ரீ நடிப்பில் வெளியான மாநகரம் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார்.

we-r-hiring

அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களை தான் பக்கம் கவர்ந்தார். விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக மாறினார்.

சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட முன்னணி திரைபிரலங்களை நடிக்கவைத்து புதிய அத்தியாயம் படைத்தார். தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் சஞ்சய் தத் உள்ளிட்ட பல இந்திய திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான இன்று அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சஞ்சய் தத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுடைய உடன் பிறப்பு, மகன், குடும்பம் லோகேஷ் கனகராஜ். கடவுள் உங்களுக்கு வெற்றி, அமைதி, சந்தோஷம் மற்றும் உடல் ஆரோகியத்தை கொடுப்பார். நான் எப்பொழுதும் உன் வாழ்க்கையில் இருப்பேன். லவ் யூ என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ