
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில், 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, சுருண்டது பாகிஸ்தான் அணி.

செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 12வது போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்.14) மதியம் 02.00 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதைத் தொடர்ந்து, பேட்டிங்கைத் தேர்வுச் செய்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி, 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில், கேப்டன் பாபர் ஆசம் 50 ரன்களையும், முகமது ரிஸ்வான் 49 ரன்களையும், இமாம் உல் ஹக் 36 ரன்களையும் எடுத்தனர்.
இந்திய அணிக்கு திரும்பிய சுப்மன் கில்….. நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி!
இந்திய அணி தரப்பில், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
பின்னர், 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.


