21 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்.
செல்லப் பிராணிகளுக்கு சொத்துகளைக் கொடுத்த மூதாட்டி!
இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், தொடர் 1-1 என்ற நிலையில் சமனில் முடிந்தது.
68 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஷமார் ஜோசப் அசத்தினார்.
மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 193 ரன்களும் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 289 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 207 ரன்களும் எடுத்தது. அறிமுகமான முதல் தொடரிலேயே அபார பந்துவீச்சின் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார் ஷமார் ஜோசப்.
துருக்கியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!
21 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி. பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய முதல் அணியானது மேற்கிந்திய தீவுகள் அணி.