வியட்நாமில் ஆசிய அளவில் நடைப்பெற்ற வலு தூக்கும் போட்டியில் இரண்டு தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனைப் படைத்துள்ளனா்.சென்னை மணலி புதுநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (38) வயதுடைய இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வியட்நாம் நாட்டில் ஹோச்சி மின் சிட்டியில் கடந்த 18 தேதி அன்று நடைபெற்ற ஆசிய அளவிலான வலு தூக்கும் ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா சார்பில் சென்னை மணலி புதுநகர் பகுதியைசேர்ந்த கார்த்திக் மற்றும் அவர் பயிற்சியாளர் லத்திபா சிராஜீதீன் இருவரும் கலந்து கொண்டனர். கார்த்திக் 67 கிலோ எடை பிரிவில் 450 கிலோ எடை தூக்கி முதலிடம் பிடித்தார். லத்திபா சிராஜ் 83 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு 177.5 கிலோ எடை தூக்கி முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
இதனையடுத்து இருவரும் இரண்டு தங்கம் பதக்கம் என 4 தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஷியாவில் நடைபெறும் உலக அளவிலான பளு தூக்கும் போட்டியில் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் விமான விபத்து! பள்ளியின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்!
