டம்மி துப்பாக்கி காட்டி திருநங்கைகளுக்கு மிரட்டல்
டம்மி துப்பாக்கி வைத்து திருநங்கையை மிரட்டிய யூடியூபர்கள் துடியலூர் போலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை கவுண்டம்பாளையத்திற்க்கு எர்டிகா காரில் கேரளா மாநிலத்தை சேர்ந்த மூன்று வாலிபர்கள் நேற்று இரவு வந்துள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த திருநங்கைகளிடம் சில்மிசம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் ஆத்திரம் அடைந்து காரில் வந்த திலீப் என்பவர் சினிமா சூட்டிங்கிற்க்கு பயண்படுத்தபடும் பொய்யான ஏர்கன் பிஸ்டல் (ஸ்போர்ட்ஸ்) துப்பாக்கி எடுத்து திருநங்கைகளை மிரட்டியதாக தெரிகிறது.

இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து துடியலூர் காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், அய்யாசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு வந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து மூன்று பேரையும் காவல் நிலையத்திற்க்கு கூட்டி வந்து விசாரனை நடத்தினர்.
அதில் கொல்லம் திருநெல்லை பாலக்காட்டை சேர்ந்த ஜாய் என்பவரின் மகன் திலீப் (33), பாலக்காடு புதூர் டெம்பிள் வீதியை சேர்ந்த சுரேஷ் மகன் கிஷோர் (23), மாங்கரையை சேர்ந்த உஜ்ஜயனார் மகன் சமீர் (30) என்றும் இவர்கள் குரும்படம் எடுப்பதும் மற்றும் யூ டியூப் சேனல் நடிகர்கள் என்பதும் தெரிய வந்தது.
கேரளாவில் இருந்து ஊட்டி செல்லும் போது இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி மற்றும் துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் நடத்திய விசாரனைக்கு பிறகு ஆயுத தடை சட்டம், கொலை மிரட்டல் உட்பட நான்கு பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
Read Also:https://apcnewstamil.com/action-should-be-taken-against-seaman-arundhati/


