

தமிழகத்தில் +1 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 04) தொடங்குகிறது. சுமார் 8.20 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வை எழுதவுள்ளனர்.
பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 01- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, +1 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 04) மொழிப்படத்துடன் தொடங்கி, மார்ச் 25- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 3,300 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 7,534 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் +1 பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். இந்த தேர்வினை 3,89,736 மாணவர்களும், 4,30,471 மாணவிகளும் என மொத்தம் 8,20,207 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். தனித்தேர்வர்களாக 5,000 பேர் +1 பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். சிறைகளில் இருக்கக் கூடிய சிறைவாசிகள் 187, +1 பொதுத்தேர்வை எழுதவுள்ளனர்.
வாழைத்தண்டு சட்னி செய்வது எப்படி?
தேர்வு மையங்களில் தேர்வு நடத்துப் பணியில் 46,700 கண்காணிப்பாளர்கள் ஈடுபடவுள்ளனர். தேர்வு முறையாக நடத்தப்படுவதைக் கண்காணிக்க 3,200 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலையான கண்காணிப்பு படையினர் 1,134 பேர் ஈடுபடவுள்ளனர்.
+1 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்களுக்கு ‘APC News Tamil’ சார்பில் ‘All The Best’ தெரிவித்துக் கொள்கிறோம்.


