

பச்சைத் துண்டு அணிந்துக் கொண்டு சட்டப்பேரவைக்கு வந்த தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இன்று (பிப்.20) காலை 10.00 மணிக்கு 2024- 2025 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
“வேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியம்”- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு!
அப்போது சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “10,000 விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுக்கைகள் வழங்க ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 127 லட்சம் மெட்ரிக் டன் உணவுத் தானிய உற்பத்தியை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயிர் பரப்பு 2022- 2023 ஆம் ஆண்டில் 95 லட்சத்து 39 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
‘மண்ணுயிர் காப்போம்’ என்ற திட்டம் ரூபாய் 206 கோடியில் புதிதாக செயல்படுத்தப்படும். மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 2 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்; 2 லட்சம் ஏக்கரில் 2 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூபாய் 206 கோடியில் திட்டம் தொடங்கப்படும். 10,000 ஏக்கரில் மரபுசார் நெல் ரகங்களை பயிரிட ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
“வேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியம்”- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு!
சீவன் சம்பா பாரம்பரிய நெல் ரகங்கள் 1,000 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்ய விலை விநியோகிக்கப்படும். 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைக்க ரூபாய் 42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வேம்பினை பரவலாக்க 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்படும். மண்புழு உரம் ஊக்குவித்தலுக்காக ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
