spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தினசரி 100 பா.ஜ.க. கொடிக்கம்பங்கள் நடப்படும்"- அண்ணாமலை அறிவிப்பு!

“தினசரி 100 பா.ஜ.க. கொடிக்கம்பங்கள் நடப்படும்”- அண்ணாமலை அறிவிப்பு!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது"- அண்ணாமலை பேட்டி!
Photo: Annamalai Twitter Page

சென்னை பனையூரில் உள்ள பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லம் முன்பு இருந்த அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர பா.ஜ.க.வின் கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் பாதுகாப்புடன் அரசு உயரதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்றினர். இந்த நிகழ்வின் போது, பா.ஜ.க.வுக்கும்- காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

we-r-hiring

தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கி.வேணு காலமானார்!

அப்போது, கிரேன் வாகனத்தின் கண்ணாடியை உடைத்த பா.ஜ.க.வினர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க.வைச் சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி தலைமறைவாக உள்ள நிலையில், மேலும் 6 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “வரும் நவம்பர் 01- ஆம் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 100 பா.ஜ.க. கொடிக்கம்பங்கள் நடப்படும். பிப்ரவரி 08- ஆம் தேதி அன்று பத்தாயிரமாவது கொடிக்கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும். தமிழக பா.ஜ.க.வின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைக்க வேண்டாம்.

கடனை திருப்பி தராததால் பெண்கள், குழந்தைகள் வீட்டிற்குள் சிறைபிடிப்பு

கொடிக்கம்பத்தை அகற்றுவதை எதிர்த்துப் போராடிய பா.ஜ.க.வினர் மீது காட்டுமிராண்டித்தன தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ