Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது!

தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது!

-

தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த தேர்வை சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதி வருகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இன்று முதல் வருகிற ஏப்ரல் 08ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 9.10 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதில் 4.57 லட்சத்திற்கு அதிகமான மாணவர்களும், 4.52 லட்சத்திற்கு அதிகமான மாணவிகளும், ஒரு மூன்றாம் பாலினத்தவரும் எழுதுகின்றனர். இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 48,700 தேர்வு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3,350 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நீங்கள் பயின்ற ஒரு அறைதான், நண்பர்களோடும், ஆசிரியர்களோடும் மகிழ்ச்சியாக உரையாடிய ஒரு அறைதான் உங்களுக்கான தேர்வு அறை. உங்களின் ஆசிரியர்கள்தான் தேர்வறை கண்காணிப்பாளர்களாக இருப்பார்கள். உங்களின் நண்பர்கள்தான் உங்களைச் சுற்றி அமர்ந்து தேர்வு எழுதுவார்கள். அது உங்களின் இடம். ஆகவே எதை நினைத்தும் பதற்றம் அடையாதீர்கள். பயம் கொள்ளாதீர்கள். தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். அதுதான் உங்களுக்கான வெற்றியைத் தேடித் தரும் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ